எலும்பு, காயம் மற்றும் மறுசீர மைப்பு அறுவை சிகிச்சைத் துறையில் சிறந்து விளங்கும் கங்கா மருத்துவமனை, அதன் பாரம்பரியத் தின்படி ஆண்டுதோறும் நடத்தும் நிறுவனர் தினப் பேருரை நிகழ்ச்சியை இன்று நடத்தியது.
சங்கரா கண் மருத்துவமனை நிர்வாக அறங்காவலர் டாக்டர் ஆர்.வி.ரமணி நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். டாக்டர் எஸ். ராஜசபாபதி அவர்கள் வரவேற்புரை வழங்கினார்,
“அரசியலமைப்புச் சட்டம், குடி மக்கள் மனப்பான்மை மற்றும் சமூக நல்லொழுக்கம் – நாட்டிற்கான ஒரு தார்மீக வழிகாட்டி” என்ற மிக முக்கியமான தலைப்பில் அவர் உரை நிகழ்த்தினார். இந்த விழாவில், இந்தியாவின் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டாக்டர் நீதியரசர் டி.ஒய்.சந்திரசூட் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பதினோராவது பேருரையை ஆற்றினார்.
நிறைவாக, டாக்டர் எஸ்.ராஜ சேகரன் நன்றியுரை ஆற்றினார். நிறுவனர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் உட்படப் பலர் இந்த விழாவில் திரளாகப் பங்கேற்றனர்.
கங்கா மருத்துவமனை 1978-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதை நினைவுகூரும் வகையிலும், அதன் நிறுவனர்களின் இலட்சியங்களைப் போற்றும் வகையிலும் ஆண்டு தோறும் இந்த நிறுவனர் தினப் பேருரை நடத்தப்படுகிறது. தொழில் முறை, நேர்மை, நாணயம் மற்றும் நெறிமுறைகள் போன்ற அடிப்படைக் கொள்கைகளுடன் இந்த நிறுவனம் நிறுவப்பட்டது. இவையே கங்கா மருத்துவமனை உலகளவில் சிறந்து விளங்க வழிகாட்டியுள்ளன.



