fbpx
Homeபிற செய்திகள்6 வயது சிறுவனுக்கு வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை கோவை ராயல் கேர் மருத்துவமனை...

6 வயது சிறுவனுக்கு வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை கோவை ராயல் கேர் மருத்துவமனை சாதனை

மருத்துவ உலகில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக, வைரஸ் தொற்றால் ஏற்பட்ட கடுமையான இதய செயலிழப்பால் (Heart Failure) பாதிக்கப்பட்ட ஆறு வயது சிறுவனின் உயிரை, ராயல் கேர் மருத்துவமனையின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக் குழு வெற்றிகரமாகக் காப்பாற்றியுள்ளது.

வேறொரு தனியார் மருத்துவமனையிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட இந்தச் சிறுவன், ராயல் கேர் மருத்துவமனைக்கு வரும் போது மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தான். செயற்கை சுவாசக் கருவி மற்றும் பல உயிர் காக்கும் மருந்துகளின் உதவியுடன் அவன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான். வேறு எந்த சிகிச்சை முறையும் பலனளிக்காத நிலையில், இதய மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே அச்சிறுவன் உயிர் பிழைக்க ஒரே வழி என்று மருத்துவக் குழு தீர்மானித்தது.
பொருத்தமான இதயம் கிடைக் கும் வரை காத்திருந்த நிலையில், சிறுவனின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இதனால், இதயம் மற்றும் நுரையீரலின் செயல்பாட்டைத் தற்காலிகமாக மேற்கொள்ளும் எக்மோ (ECMO) கருவியின் உதவியை நாட வேண்டியதாயிற்று. எக்மோ உயிர் காக்கும் கருவி என்றாலும், நீண்ட நாட்கள் அதைப் பயன்படுத்துவது அதிக ஆபத்து நிறைந்தது.

சுமார் மூன்று வாரங்களுக்குப் பிறகு, அச்சிறுவனுக்குப் பொருத்த மான ஒரு தான இதயம் கிடைத் தது. ஆனால் அந்த இதயம் 30 வயதுடைய ஒருவருடையது என் பதால், சிறுவனின் இதயத்தை விட ஐந்து மடங்கு பெரியதாக இருந் தது. மேலும், மூளைச் சாவால் ஏற்பட்ட சில ஆரம்பகால பாதிப்புகளும் அதில் இருந்தன. இருப்பினும், இந்தச் சவால்களை எதிர்கொண்டு, மருத்துவக் குழு அந்தச் சிக்கலான அறுவை சிகிச்சையைத் துணிச்சலாக மேற் கொண்டு வெற்றி கண்டது.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு, புதிதாக பொருத்தப்பட்ட இதயம் இயல்பாக செயல்பட ஆரம்பித்து, சிறுவனின் உடலோடு ஒத்துப் போக ஏதுவாக, மேலும் 15 நாட்களுக்குச் சிறுவன் எக்மோ ஆதரவில் வைக்கப்பட்டான். கிட்டத்தட்ட மூன்று மாதகால தீவிர சிகிச்சைக்குப் பிறகு, சிறுவன் பூரண குணமடைந்து தற்போது வீடு திரும்பத் தயாராக உள்ளான்.

ராயல் கேர் மருத்துவமனை யின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான டாக்டர் க.மாதேஸ் வரன், இந்தச் சாதனையை நிகழ்த்திய மருத்துவக் குழுவைப் பாராட்டினார். இதில் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக் டர் ஜி.பிரதீப், மயக்கவியல் நிபுணர் டாக்டர் எஸ். கிருபானந்த், தீவிர சிகிச்சை மருத்துவப் பிரிவின் தலைவர் டாக்டர் எம்.என்.சிவகுமார் மற் றும் செவிலியர்கள், நிர் வாகப் பணியாளர்கள் ஆகியோர் அடங்குவர். “குழந்தைகளுக்கான இதய சிகிச்சையில் இது ஒரு முக்கிய மைல்கல் என்றும், மருத்துவமனையின் உறுப்பு மாற்று மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவின் மிகச்சிறந்த நிபுணத்துவத்திற்கு இது சான்றாகும்,” என்றும் அவர் குறிப்பிட்டார். ராயல் கேர் மருத்துவமனை, இதயம், கல்லீரல், நுரையீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளைத் தொடர்ந்து வெற்றிகரமாகச் செய்து வருவதோடு, சிக்கலான உறுப்பு மாற்று அறுவை சிகிச் சைகளுக்கான முன்னணி மருத் துவமனையாகவும் திகழ்கிறது.
உலகத்தரம் வாய்ந்த மருத்துவச் சேவையை வழங்குவதில் ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத் துவமனை உறுதியாக உள்ளதைச் சுட்டிக்காட்டிய டாக்டர் க.மாதேஸ்வரன், மருத்துவமனை பெற்றுள்ள JCI, CARF, SRC (USA) மற்றும் NABH போன்ற உயரிய சர்வதேச மற்றும் தேசிய அங்கீகாரங்கள் இதற்குச் சான்று என்றும் தெரிவித்தார்.

இந்தத் தனித்துவமான வெற் றிச் செய்தி, இறுதி நிலை இதய செயலிழப்பை எதிர்கொள்ளும் குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்குப் புதிய நம்பிக் கையை அளித்துள்ளது.

படிக்க வேண்டும்

spot_img