நவம்பர் 15 முதல் 18 வரை மத்தியப் பிரதேசத் தின் குவாலியரில் முதன் முறையாக நடை பெற்ற சிபிஎஸ்இ பள்ளிக ளுக்கான தேசிய அள விலான கராத்தே சாம்பியன்ஷிப் பில், ஈரோடு பப்ளிக் பள்ளியின் 7 ஆம் வகுப்பு மாணவர்களான நிதிசன் மற்றும் கபிலன் 14 வயதுக்குட்பட்ட பிரிவில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர். அவர்கள் ஈரோட்டுக்கு வந்தபோது, பள்ளி ஆசிரியர்கள் தீபிகா, கார்த்தி, பேபி, வடிவேல், அவர்களின் பயிற்சியாளர் ஜெயம் அகாடமி தலைவர் மகேஸ்வரி சுரேஷ் மற்றும் அதிமுக செயல்பாட்டாளர் கண்ணுபையன் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களை பள்ளி செயலாளர் அருண் கணேஷ், தாளாளர் அனிதா மற்றும் முதல்வர் மினுவந்தனா ஆகியோர் பாராட்டினர். நாடு முழுவ தும் இருந்து 250 சிபிஎஸ்இ பள்ளிகளைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மாண வர்கள் போட்டியில் பங் கேற்றனர்.



