fbpx
Homeபிற செய்திகள்ரேலா மருத்துவமனையில் ‘உலக குறைப்பிரசவ தினம்’ அனுசரிப்பு நடிகர் ரவிமோகன் பங்கேற்றார்

ரேலா மருத்துவமனையில் ‘உலக குறைப்பிரசவ தினம்’ அனுசரிப்பு நடிகர் ரவிமோகன் பங்கேற்றார்

2025ம் ஆண்டின் உலக குறைப்பிரசவ தினத்தை முன்னிட்டு, ரேலா மருத்துவமனை 50-க்கும் மேற்பட்ட குறைப்பிரசவ குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்கேற்ற சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதில் 25 வாரங்களிலேயே பிறந்த குழந்தைகள் மற்றும் பிறக்கும் போது 600 கிராம் என்ற மிக குறைவான எடையுடன் இருந்த குழந்தைகளும் பங்கேற்றனர். பச்சிளம் குழந்தைகளுக்கு உகந்த தீவிர சிகிச்சை வழங்குவதில் மருத்துவக்குழுவிற்கு நிபுணத்துவ மும் அனுபவமும் மேம்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளும் இருக்குமானால், அதிக பாதிப் புக்குள்ளாகக்கூடிய, மிககுறைவான எடையுள்ள குழந்தைகளும் உயிர் பிழைத்து, மற்ற குழந்தைகளை போல ஆரோக்கி யமான நபர்களாக வளரவும் சாதிக்கவும் முடியும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நிகழ்வின் நோக்கமாகும். இந்த நிகழ்வில் பிரபல திரைப்பட நடிகர் ரவி மோகன் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். குறைப்பிரசவக் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் அமர்வுகளும் இந்நிகழ் வில் இடம்பெற்றன.

இந்நிகழ்ச்சிக்கு ரேலா மருத்துவமனையின் தலைவர், பேராசிரியர் முகமது ரேலா தலைமை வகித்தார். மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலப் பிரிவு இயக்குநர் டாக்டர் நரேஷ் சண்முகம், பச்சிளம் குழந்தை மற்றும் குழந்தைகள் நல முதுநிலை நிபுணர் டாக்டர் வேல்முருகன் கண்ணப்பன், பொது குழந்தைகள் நலவியல் மருத்துவப் பிரிவின் கிளினிக்கல் லீடு டாக்டர் எம்.பி. வெங்கடேஷ் ஆகியோருடன் மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவின் நிபுணர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இது குறித்து ரேலா மருத்துவ மனையின் தலைவர், பேராசிரியர் முகமது ரேலா கூறுகையில், “குறைப்பிரசவம் ஒரு முக்கியமான பொது சுகாதாரப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்புக்கு குறைப்பிரசவ சிக்கல் களே ஒரு முக்கிய காரணமாக இருக்கின்றன.
25 வாரங்களில் பிறக்கும் குழந் தைகளுக்குக் கூட இப்போது நம்மால் சிறந்தசிகிச்சை அளித்து அவர்களை காப்பாற்ற முடிகிறது. இந்த குழந்தைகள் எதிர்காலத்தில் ஆரோக்கியமான நபர்களாக வளர முடியும். கடந்த காலத்தில், பத்து குறைப்பிரசவக் குழந்தைகளில் ஆறு அல்லது ஏழு குழந்தைகளை மட்டுமே நம்மால் காப்பாற்ற முடிந்தது. இன்றையகாலத்தில், பச்சிளம் குழந்தை பராமரிப்பில் ஏற்பட்டுள்ள மேம்பட்ட முன் னேற் றங்களால், அவர்களில் கிட்டத் தட்ட அனைவரையும் எங்களால் காப்பாற்ற முடிகிறது” என்றார்.

பச்சிளம் குழந்தை மற்றும் குழந்தைகள் நல நிபுணர்டாக்டர். வேல்முருகன் கண்ணப்பன் கூறு கையில், “இந்தியாவில், ழிதிபிஷி-5 தரவுகளின்படி, 13% குழந்தைகள் குறைப்பிரசவத்திலும், 17% குழந்தைகள் குறைந்த பிறப்பு எடையுடனும் பிறக்கின்றனர். இது ஒவ்வொரு ஆண்டும் கிட்டத் தட்ட 3.5 மில்லியன் குறைப்பிர சவங்கள் நிகழ்வதைக் காட்டு கிறது. கர்ப்பிணிப் பெண்கள் வழக்கமான பரிசோதனைகளைப் பின்பற்று வதன் மூலம், குறைப்பிரசவத்தைத் தவிர்க் கலாம்”என்றார்.

படிக்க வேண்டும்

spot_img