fbpx
Homeபிற செய்திகள்கூட்டுறவு வாரவிழாவை முன்னிட்டு கால்நடை மருத்துவ முகாம்

கூட்டுறவு வாரவிழாவை முன்னிட்டு கால்நடை மருத்துவ முகாம்

72 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு கூட்டுறவு ஒன்றியம், பால் வளத்துறை மற்றும் ஆவின் இணைந்து நடத்தும் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் சிபிடி 655 தாயம்பாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்றது. த.உதயகுமார் (துணை பதிவாளர்) தலைமை தாங்கினார்.
வை.சுஜாதா (பொது மேலாளர், ஆவின்), கூட்டுறவு ஒன்றிய மேலாளர் கண்ணன், முதுநிலை ஆய்வாளர் செ.தியாகராஜன் மற்றும் உதவி பொது மேலாளர் நாகராஜ் மற்றும் மருத்து வர்கள் சுரேஷ், லோகரஞ்சனி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையொட்டி நடை பெற்ற சிறப்பு கால்நடை மருத்துவ முகாமில் தாயம் பாளையம் பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் தங்களது கால்நடைகளை கொண்டு வந்து பயன்பெற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img