சென்னையின் முன்னணி பன்னோக்கு மருத்துவமனையான விஎஸ் ஹாஸ்பிட்டல்ஸ், கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனது மருத்துவமனையில் VELYS எனும் ரோபோ உதவியுடன் செயல்படும் நவீன சிகிச்சை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு மிகத் துல்லியமாகவும், ஒவ்வொரு நோயாளிக்கும் ஏற்ற வகையிலும் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை யை மேற்கொள்ள உதவும் அடுத்த தலைமுறை தொழில்நுட்பமாகும். இந்த மேம்பட்ட சிகிச்சை செயல் முறையின் அறிமுகத்தை முன்னிட்டு இம்மாத இறுதி வரை இலவச எலும்பியல் மருத்துவ ஆலோச னை களை இம்மருத்துவமனை வழங்குகிறது.
இந்த நவீன சிகிச்சை மையத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணகுமார் தினேஷ் கார்த்திக் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் பேராசிரியர்டாக்டர் எஸ். சுந்தர் (மருத்துவ இயக்குநர், ரோபோட்டிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் கட்டிஅறுவை சிகிச்சை நிபுணர்), பேரா சிரியர் டாக்டர் எஸ். சுப்பிர மணியன் (முது நிலை மருத்துவ புற்று நோயியல் நிபுணர் மற்றும் தலைவர்& நிர்வாக இயக்குநர்), முத்து சுப்பிர மணியன் (நிர்வாக இயக்குநர்), பிரசன்னா சீனிவாசன் (குழும தலைமை இயக்க அதிகாரி) மற்றும் எஸ். ராமு மகாலிங்கம் (நிதித்துறை இயக்குநர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பேராசிரி யர் டாக்டர் சுந்தர் பேசுகையில், “எமது மருத்துவமனையில் VELYS ரோபோ உதவியு டனான சிகிச்சை செயல்முறையை அறிமுகம் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். முழங்கால் மாற்று சிகிச்சையில் ஒரு புரட்சி கரமான மேம்பாடான இத்தொழில்நுட்பம், அறுவை சிகிச்சையின் போது நேரடித் தகவல் களை உடனுக்குடன் வழங்குவதோடு, அறுவை சிகிச்சைக்கு முந்தைய ‘சிடி ஸ்கேன்’ பரிசோதனை செய்ய வேண்டியதன் அவசியத்தையும் தேவையற்றதாக்கி விடுகிறது. மேலும், செயற்கை மூட்டுகளை மிகத் துல்லியமாகப் பொருத்த இது உதவுகிறது. நோயாளிகள் மிக விரை வில் குணமடைந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப லாம்,” என்றார்.
விஎஸ் மருத்துவமனை யின் எலும்பியல் மற்றும் ரோபோட்டிக் ஆர்த்ரோ பிளாஸ்டி மையம்,முழங்கால் மற்றும் இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள், மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைகள், தோள்பட்டை மற்றும் முழங்கை சிகிச்சைகள், இடுப்பு எலும்பு அறுவை சிகிச்சைகள் மற்றும் புற்றுநோய் கட்டிகள் பாதித்த கைகால்களை அகற்றுவதைத் தவிர்க்கும் நவீன சிகிச்சைகள்போன்ற விரிவான சேவைகளை வழங்குகிறது.
‘ஸ்மார்ட்’ தொழில்நுட்பம் மூலம் ஒருபக்க முழங்கால் மற்றும் தோள்பட்டைக்கான பிரத்யேக சிகிச்சைகளும் இங்கு வழங்கப்படுகின்றன.



