fbpx
Homeபிற செய்திகள்ஒரு சிறுமியின் 17 கனவுகள் 12 வயதே ஆன சிறுமி புனிதம் எழுதிய நூல் கோவையில்...

ஒரு சிறுமியின் 17 கனவுகள் 12 வயதே ஆன சிறுமி புனிதம் எழுதிய நூல் கோவையில் வெளியீடு

ஐ.நா. நிலைத்த வளர்ச்சி இலக்குகளை (SDGs) அடிப்படையாகக் கொண்டு, குழந்தைகளுக்குப் புரியும் வகையில் கதைகளாக எழுதப்பட்ட “A Girl with 17 Dreams” (தமிழில்: ஒரு சிறுமியின் 17 கனவுகள்) என்ற நூலை 12 வயதே ஆன சிறுமி புனிதம் எழுதி உள்ளார். அந்த புத்தகம் கடந்த 16ம் தேதி கோவை அறிவியல் மையத்தில் வெளியிடப்பட்டது.

இந்தப் புத்தகத்திற்கு இஸ்ரோ முன்னாள் இயக்குநர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரையிடம் இருந்து சிறப்பு பாராட்டு கிடைத்துள்ளது. அவரின் பரிந்துரையின் பேரில், புனிதத்தின் தந்தை இ.செந்தில்குமார் இந்த நூலைத் தமிழில் மொழிபெயர்த்து, அதன் செய்தி எண்ணற்ற தமிழ் பேசும் குழந்தைகளுக்கு சென்றடைய வழிவகுத்துள்ளார்.

இந்த விழாவில் வேலம்மாள் இன்ஸ்டிட்யூஷன்ஸ் தலைவர் எம்.வி.எம்.வேல்முருகன், சௌபாக்யா என்டர்ப்ரைசஸ் வி.வரதராஜன், ஜிஎஸ்டி உதவி கமிஷனர் மனிமோகன், ஆம்னி புக்ஸ் லைப்ரரி ராஜன், பிர்லா ஓபன் மைன்ட்ஸ் இன்டர்நேஷனல் ஸ்கூல் இயக்குநர் சந்தோஷ் சுப்பிரமணியன் போன்ற முக்கிய விருந்தினர்கள் கலந்துகொண்டு சிறுமியின் முயற்சியை பாராட்டினர்.

விழாவில் புனிதம் தனது புதிய முயற்சியாக “18-வது கனவு அமைப்பு” எனும் தன்னார்வ முயற்சியை அறிமுகப்படுத்தினார். இந்த அமைப்பின் நோக்கம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இந்த நூலை வழங்கி, கனவு காணும் தைரியம், மாற்றத்தை உருவாக்கும் பொறுப்பு மற்றும் உலகைப் பற்றிய விழிப்புணர்வு ஆகியவற்றை ஊக்குவிப்பதாகும்.

விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் உள்ளிட்ட அனைவரும் புனிதமின் சமூகப் பொறுப்புணர்வு, படைப்பாற்றல், மற்றும் தெளிவான நோக்கத்தை பாராட்டினர்.

படிக்க வேண்டும்

spot_img