கடலூர் அருகே -பூதங்குடி எஸ்.டி.சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பட்டிமன்ற பேச்சாளர் பர்வீன் சுல்தானா கலந்து கொண்டு சிறப்பித்தார்.
விழாவிற்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் சாமுவேல் சுஜின், குழந்தைகள் நல மருத்துவர் நிர்வாக இயக்குனர் டாக்டர் தீபா சுஜின் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
விழாவில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு கல்வி வழி காட்டு நெறிமுறைகள் வழங்கப் பட்டது. மாணவர்கள் எவ்வாறு எதிர்காலத்தில் தங்களை வடிவமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை பர்வீன் சுல்தானா மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் எடுத்துரைத்தார்.
குழந்தைகள் தினத்தையொட்டி ஆசிரியர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றம் செய்யப்பட்டது. ஆசிரியர்கள் குழந்தைகளாக மாறி தங்களது நடிப்பு கலையின் மூலம் மாணவர்களை மகிழ்வித்தனர்.
இவ்விழாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்து தற்போது மருத்துவம் பயின்று வரும் ராஹாஹர்ஷினிக்கு பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் பள்ளி நிர்வாகம் கௌரவப்படுத்தி நினைவு பரிசை வழங்கியது.
குழந்தைகள் தினத்தின் சிறப்பு அம்சமான குழந்தைகளை கொண்டாடுவோம் என்ற நோக்கில் மாணவர்களின் தனித்திறனை வெளிக்கொணரும் வண்ணம் மாணவர்களுக்கிடையே விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பொருட்களும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.



