fbpx
Homeபிற செய்திகள்கோவை பிஎஸ்ஜி மருத்துவமனை 36வது தின விழா, விருது வழங்கி கொண்டாட்டம்

கோவை பிஎஸ்ஜி மருத்துவமனை 36வது தின விழா, விருது வழங்கி கொண்டாட்டம்

பிஎஸ்ஜி IMSR & Super Speciality இணைந்து நடத்தும் 36வது மருத்துவமனை தின விழா பிஎஸ்ஜி IMS&R அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. மருத்துவ குழு, மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு, பிஎஸ்ஜி மருத்துவமனையின் சமூக சேவையையும் மருத்துவ முன்னேற்றங்களையும் எடுத்துரைத்து கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக டாக்டர் டி.ஜி. ராமமூர்த்தி, மூத்த ஆலோசகர் டாக்டர் எஸ். தங்கவேலு மற்றும் மூத்த ஆலோசகர் உள்ளிட்ட மருத்துவ நிபுணர்கள் பங்கேற்றனர்.

டாக்டர் கே.பரத்வாஜ் வழங்கிய மருத்துவப் பிரார்த்தனை பாடலுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து பிஎஸ்ஜி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனை இயக்குநர் டாக்டர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன் வரவேற்றுப் பேசினார்.

பிஎஸ்ஜி அண்ட் சன்ஸ் அறக்கட்டளை தலைவர் ஜி.ஆர்.கார்த்திகேயன் தனது தலைமை உரையில், பிஎஸ்ஜி மருத்துவமனையின் உயர்நிலை மருத்துவச் சேவை, தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் மனித நேயம் சார்ந்த பணிகளை எடுத்துரைத்தார்.

சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற டாக்டர் டி.ஜி. ராமமூர்த்தி, மூத்த ஆலோசகர் டாக்டர் எஸ். தங்கவேலு ஆகியோர் பேசுகையில் பிஎஸ்ஜி மருத்துவமனையின் சமூக சேவைகளையும் மருத்துவ கல்வியில் அளிக்கும் பங்களிப்புகளையும் பாராட்டினர்.

விழாவின் சிறப்பம்சமாக இந்த ஆண்டின் 36 சிறந்த பணியாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விருதுகளை பிஎஸ்ஜி அண்ட் சன்ஸ் அறக்கட்டளை டிரஸ்டி எல்.கோபாலகிருஷ்ணன் வழங்கினார்.

மருத்துவ இயக்குநர் டாக்டர் ஆர்.கார்த்திகேயன் (பிஎஸ்ஜி ஐஎம்எஸ்ஆர் மற்றும் மருத்துவமனை) நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img