சாலை பாதுகாப்பு மற்றும் ஹெல்மெட் அணிவ தன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை கோவை மக்களிடம் ஏற்படுத்த பைக் பேரணி நிகழ்வை கோயம்புத்தூர் பைக்கர்ஸ் கம்யூனிட்டி உடன் இணைந்து கோவை விழா 2025-ன் ஒரு அங்கமாக பைக் பேரணி நடத்தினர்.
கோவை வட்டார போக்குவரத்து அலுவலகம் (சென்ட்ரல்) எதிரே உள்ள பி.ஆர்.எஸ். மைதானத்தில் இந்த பேரணி துவங்கியது. இதில் 500 பேர் தங்களது இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து, கொடிசியா மைதானம் வரை பேரணி சென்றனர்.
இந்தப் பேரணியை கோவை மாநகர காவல் துறையின் போக்குவரத்து துணை ஆணையர் எஸ்.அசோக் குமார் கொடியசைத்து துவங்கி வைத்தார்.
ஹெல்மெட் அணிவதன் அவசியத்தையும் பொறுப் பாக சாலை விதிகளை பின்பற்றி வாகனத்தை இயக்குவது குறித்த விழிப் புணர்வையும் இந்த 11 கிலோமீட்டர் தொலைவு கொண்ட பாதையில் பேர ணியாக சென்று வாகன ஓட்டிகள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இளைஞர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்ப டுத்தக்கூடிய நிகழ்ச்சியாக இந்த பேரணியை நடத்து வதற்காகவும் இளைஞர்கள் மூலம் சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்ப டுத்த முயற்சிகள் எடுத்த தற்காகவும் இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை போக்குவரத்து துணை ஆணையர் எஸ்.அசோக் குமார் பாராட்டினார்.
மேலும் அவர் பேசுகை யில், வாகனங்களை வேகமாக இயக்குவது தான் பயணத்தை இனி மையாக்கும் என்று எண்ணக்கூடாது.
அதை நிதானமாக இயக்கினாலும் அந்தப் பயணத்தை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க முடியும் என்றார்.
இளைஞர்கள் சாலைகளில் செல்லும் பொழுது பொறுப்புடன் வாகனத்தை இயக்கி அவர்களுக்கும் பிறருக்கும் பாதுகாப்பான சூழலை சாலைகளில் ஏற்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.



