fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் 104வது நிறுவனர் தினவிழா: ரூ.128.15 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டது

தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் 104வது நிறுவனர் தினவிழா: ரூ.128.15 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டது

தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் 104வது நிறுவனர் தினவிழா நடைபெற்றது. விழாவில் பல்வேறு பயனாளிகளுக்கு ரூ.128.15 கோடி மதிப்பில் கடன் உதவிகள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடியை தலை மையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் 104வது நிறுவனர் தினவிழா, ஏவிஎம் கமலாவேல் மஹாலில் நடைபெற்றது.
விழாவிற்கு வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சலீ எஸ். நாயர் தலைமை வகித்து, 200க்கும் மேற்பட்ட ஆன்லைன் சேவைகளை வழங்கும் டிஜிட்டல் என்கேஜ்மென்ட் ஹப் (DEH) போன்ற புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார்.

விழாவில் பேசிய வங்கியின் செயல் இயக்குநர் வின்சென்ட், வங்கி ரூ.1 லட்சம் கோடி மொத்த வணிக இலக்கைக் கடந்ததை அறிவித்துள்ளார். முன்னாள் இயக்குநர் சி.எஸ்.ராஜேந்திரன், வங்கியின் 100 ஆண்டுகளுக்கும் மேலான லாபத்தன்மை மற்றும் நேர்மையான மதிப்புகளைப்பாராட்டி பேசினார். தலைமை விருந்தினராக “இந்தியாவின் நிலவு மனிதன்” என்று அழைக்கப்படும் இஸ்ரோ வின் முன்னாள் இயக்குநர் பத்மஸ்ரீ டாக்டர் மயில் சாமி அண்ணாதுரை கலந்துகொண்டார்.
சுயாதீன இயக்குனர் (பகுதி நேர தலைவர்), கே.ராமச்சந்திரன், வங்கியின் ஸ்திரத்தன்மை மற்றும் கவனமான வளர்ச்சியைக் கோடிட்டுக் காட்டினார். வங்கியின் குறிக்கோள் அனைவருக்கும் அணுகக்கூடியதாகவும், மலிவு விலையில் சேவைகளை வழங்கு வதாகவும் குறிப்பிட்டார். வங்கி பாதுகாப்பானது என்றும், அதன் வளர்ச்சி சீராகவும் வெளிப்படையானதாகவும் இருப்பதை உறுதிப்படுத்தினார். வாடிக்கையாளர்களை வங்கியின் “முதுகெலும்பு” என்று அழைத்த அவர், டிஎம்பி மேலும் வளர உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

விழாவில் சிறப்பு விருந்தினர், மயில்சாமி அண்ணாதுரை, வங்கியின் புதிய சேவைகளைத் தொடங்கி வைத்தார். மேலும் பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கு வங்கியின் 104வது நிறுவனர் தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் வரவிருக்கும் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் திட்டத்தின் முக்கியத் துவத்தை அவர் எடுத்து ரைத்தார்.
விழாவின் ஒரு பகுதியாக, பல சமூக நலப்பணிகள் நடைபெற்றது. தூத்துக்குடி உட்பட பல்வேறு இடங்களில் ரத்த தான முகாம்கள் மற்றும் கண் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டன. இரத்த தானம் மற்றும் கண் பரிசோதனை முகாம் மூலம் சுமார் 1000 பேர் பயனடைந்தனர். பல்வேறு பள்ளிகள், ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் தேவைப்படும் ஏழை தனிநபர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்காக அத்தியாவசிய பொருட்கள் வங்கி சார்பில் வழங்கப் பட்டது.

தூத்துக்குடி மற்றும் மூன்று பிற பிராந்தியங்களில் பிரத்யேக கடன் மேளாவை நடத்தி, பல்வேறு பயனாளிகளுக்கு ரூ.128.15 கோடி மதிப்பில் கடன் உதவிகள் வழங்கப்பட்டது. முன்னதாக பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும், நிறைவாக விஜய் டிவி புகழ் ஈரோடு மகேஷ் மற்றும் குழுவினரின் பொழு துபோக்கு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழாவில் இயக்குநர்கள் குழு, நிர்வாக இயக்குனர், நிர்வாக துணைத் தலைவர்கள், தலைமை நிதி அதிகாரி, நிறுவனர் இயக்குநர்களின் குடும்ப உறுப்பினர்கள், வணிக கூட்டாளர்கள், பங்குதா ரர்கள், வாடிக் கையாளர்கள், ஊடக நண்பர்கள், பல்வேறு பிரமுகர்கள், பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img