fbpx
Homeபிற செய்திகள்78 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து: கோவை நிர்மலா மகளிர் கல்லூரி அசத்தல்

78 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து: கோவை நிர்மலா மகளிர் கல்லூரி அசத்தல்

கோவை நிர்மலா மகளிர் கல்லூரி தனது 78ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு நேற்று (7 -ந் தேதி) காலை 10.30 முதல் மதியம் 12.30 வரை ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் விழாவை கோலாகலமாக நடத்தியது. தனது கல்வி மற்றும் நிறுவன முன்னேற்றப் பயணத்தில் ஒரு வரலாற்றுச் சாதனையைப் பதித்தது. கல்வி நிறுவனங்கள், தொழில்துறை நிறுவனங்கள், அரசு சாரா அமைப்புகள், சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் திறன் மேம்பாட்டு நிறுவனங்கள் உட்பட மொத்தம் 78 புரிந்துணர்வு ஒப்பந்தம் உடன்படிக்கை அடிப்படையில் கையெழுத்திடப்பட்டன.

இது கல்வி மேம்பாடு, புதுமை, சமூகப் பொறுப்பு மற்றும் நாட்டிற்கான பங்களிப்பில் கல்லூரியின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.
கல்லூரிச் செயலர் அருட் சகோ. முனைவர் குழந்தை தெரஸ் விழாவுக்குத் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் அருட்சகோ.முனைவர் மேரி பபியோலா நிகழ்வைத் தொடக்கிவைத்தார்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம்(TNSDC), நாஸ்காம் (NASSCOM), நான் முதல்வன், வெற்றி நிச்சயம் மற்றும் கல்வி அமைப்புகள் 23, தொழில் அமைப்புகள் 40, அரசு சாரா அமைப்புகள் 15, ஆகியவற்றுடன் 78 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (எம்.ஓ.யூ) கையெழுத்திடப்பட்டன.

கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கும் வேலைஇல்லா இளைஞர்களுக்கும் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு வழங்குதல், மேலும் தமிழக அரசு இணைந்த திறன் மேம்பாட்டு திட்டங்களை முன்னெடுத்தல் போன்ற பணிகள் இவ்வமைப்புகளுடன் அமைப்புகளின் நிறுவனர்கள் மற்றும் முக்கிய உறுப்பினர்கள் வாயிலாக பெரிய இலக்கை அடைவதற்கான நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான ஆராய்ச்சி, பயிற்சி, இத்தகைய தொழில் முயற்சி, சமூக சேவை, சுற்றுச்சூழல் ஆகியவற்றை மேம்படுத்தி, கல்வி மற்றும் தொழில் துறைகளின் இணைப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில் இணைந்து மேற்கொள்ளப்படுகின்றன. அடிப்படையில் உடன்படிக்கை உறுதிப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஸ்டார்ட்-அப் TN நிறுவனத்தின் உதவி துணைத் தலைவர் அகிலா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுச் சிறப்பித்தார் அவர் விழாவில் பேசும்போது, கல்லூரியின் 78 ஆண்டின் நிறைவில் 78 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஒப்பந்தம் நிகழ்த்தப்பட்டது மிகப்பெரிய அரிய சாதனை.

வருங்காலத்தில் இக்கல்லூரியின் மிகப்பெரிய சாதனைக்கான வளர்ச்சிக்கு ஒரு மைல் கல் என்று குறிப்பிட்டார்.
கல்லூரியின் உயர்தரக் கல்வி, திறன் மேம்பாடு மற்றும் சமூகப் பொறுப்புடன் 78 ஆண்டுகளாக செயல்பட்டு வருவதை நினைவுப்படுத்தும் வகையில் – 78 புரிந்துணர்வு ஒப்பந்தம் எனும் வரலாற்றுச் சாதனையை நிர்மலா மகளிர் கல்லூரி நிகழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img