fbpx
Homeபிற செய்திகள்அகில இந்திய பார்வர்ட் பிளாக் சார்பாக தேவர் ஜெயந்தி விழா

அகில இந்திய பார்வர்ட் பிளாக் சார்பாக தேவர் ஜெயந்தி விழா

பசும்பொன் உ முத்துராமலிங்க தேவரின் 118 வது ஜெயந்தி விழா மற்றும் 63 வது குருபூஜை விழாவினை முன்னிட்டு திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் மகேஷ் குமார் தேவர் தலைமையிலும் மாநகர் மாவட்ட தலைவர் மகாலிங்கம் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் எஸ்.கர்ணன் தேவர் கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த திருவுருவப்படுத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அன்னதானத்தை வழங்கினார்.

மேலும் பல்வேறு இடங்களில் புலிக்கொடி ஏற்றப்பட்டது இந்த நிகழ்வில் மாநகர செயலாளர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பிரபாகரன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் யோகேஸ்வரன், பகுதி செயலாளர் சங்கராபுரம் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

திருப்பூர் மாவட்டம் முழுவதிலும் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img