முதலமைச்சர் கோப்பைக்கான வளைகோல் பந்து விளையாட்டுப்போட்டி திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் கரூர் தான்தோன்றிமலை மலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் ஆர். ஏ.ரித்திகா, எஸ்.எஸ்.சஸ் மிதா ஆகியோர் கலந்து கொண்டு மாவட்டத்தில் முதலிடம் பெற்று மாநில அளவில் விளையாட தேர்வு செய்யப்பட்டனர்.
2025- 26 ஆம் ஆண் டிற்கான குடியரசு தின விழா போட்டியில் இதே பள்ளி மாணவன் தரனீஷ், மாவட்டத்தில் இரண்டாம் இடம் பெற்று மாநில அளவில் விளையாடத் தேர்வாகி உள்ளார்.
இவர்கள் அனைவருக்கும் இன்று பாராட்டு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் முதல்வர் ஜெய சித்ரா தலைமையில் நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் பேங்க் சுப்ரமணியன் கலந்து கொண்டு மாணவ, – மாணவிகளுக்கு அரசு வழங்கிய பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுப் பொருட்கள் ஆகியவற்றை வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வில் விளை யாட்டு துறை ஆசிரியர்கள் சக்திவேல், திலகவதி, தாரணி உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தனர்.



