fbpx
Homeபிற செய்திகள்0% பிடித்தத்துடன் எக்ஸ்சேஞ்ச்: பழைய தங்க நகைகளை மாற்றும் திட்டத்தை முன்னெடுக்கும் தனிஷ்க் - சச்சின்...

0% பிடித்தத்துடன் எக்ஸ்சேஞ்ச்: பழைய தங்க நகைகளை மாற்றும் திட்டத்தை முன்னெடுக்கும் தனிஷ்க் – சச்சின் டெண்டுல்கர்

டாடா குழுமத்தின் ஒரு அங்கமான தனிஷ்க், இந்தியாவில் அதிக நம்பிக்கைக்குரிய ஆபரண பிராண்டாக திகழும் நிலையில் இந்நாட்டில் பழைய தங்க நகைகளை புதிய நகைகளாக மாற்றும் இந்நாட்டின் மிகப்பெரிய இயக்கத்தை தொடங்கி முன்னெடுத்து வருகிறது.

பழைய தங்க நகைகளை புதிய, நவீன வடிவமைப்புகளாக மாற்றிக் கொள்வதன் மூலம் நம் நாடு தங்க இறக்குமதிக்காக பிற நாடுகளைச் சார்ந்திருக்கும் நிலையை குறைக்கிறது. நாட்டின் நலன் சார்ந்த இந்த குறிக்கோளை வலுப்படுத்துவதற்காக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உடன் தனிஷ்க் இணைந்திருக்கிறது.

2025 அக்டோபர் 21-ம் தேதி வரை அனைத்து கேரடேஜ்களிலும் (9 ரிஜி என்ற குறைந்த அளவு வரை) பழைய தங்க நகைகளை மாற்றும்போது பூஜ்ய (0%*) பிடித்தம் என்ற சிறப்பு சலுகையை நுகர்வோர்களுக்காக தனிஷ்க் முதன் முறையாக வழங்குகிறது. தேச நலன் மீது அக்கறையுடன் சுயசார்பை ஆதரிக்கும் இந்த சிறப்பான முயற்சியில் ஒவ்வொரு இந்தியரும் பங்கேற்பதை இத்திட்டத்தின் மூலம் தனிஷ்க் எளிதாக்கியிருக்கிறது.

கடந்த பல ஆண்டுகளாக, தனிஷ்க் – ன் தங்க பரிமாற்ற திட்டத்தில் 30 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் பங்கேற்று ஏறக்குறைய 1.7 லட்சம் கிலோ தங்கத்தை மறுசுழற்சி செய்திருக்கின்றனர். தனிஷ்க் பிராண்டின் மொத்த பிசினஸில் 40% இந்த சக்தி வாய்ந்த பரிமாற்ற இயக்கத்தின் மூலம் இப்போது முன்னெடுக்கப்படுகிறது.

டைடன் கம்பெனி ஆபரண பிரிவின் தலைமை செயலாக்க அதிகாரி அஜய் சாவ்லா கூறுகையில், பழைய தங்க நகைகளை மாற்றுவதன் ஆற்றல் அபரிமிதமானது; தனிப்பட்ட மகிழ்ச்சியோடு, தேச நலனிற்கு ஆதரவளிக்கும் தாக்கமும் ஒன்றாக இதில் இணைந்திருக்கிறது.

இந்த பண்டிகை காலத்திற்காக முதன்முறை யாக நாங்கள் வழங்கும் 0% பிடித்தம் என்ற சலுகைத் திட்டத்தின் மூலம் நமது நாட்டை சுயசார்புள்ளதாக மாற்றும் மகத்தான இலட்சிய திட்டத்தில் ஒவ்வொரு இந்தியரும் பங்கேற்பதை நாங்கள் மிக எளிதானதாக ஆக்குகிறோம், என்றார்.

சச்சின் டெண்டுல்கர் கூறுகையில், ஒவ்வொரு இந்திய குடும்பத்திலும் ஒருங்கிணைந்த ஒன்றாக தங்கம் இருக்கிறது. தனிஷ்க் தங்க எக்ஸ்சேஞ்ச் திட்டம், இந்த பாரம்பரியத்தை நேர்த்தியாக புதுப்பிக்க ஒரு வெளிப்படையான மற்றும் நம்பகமான வழிமுறையை குடும்பங்களுக்குத் தருகிறது.

இந்த ஒவ்வொரு பரிமாற்றமும் கடந்தகால பழைய ஆபரணங்களை, இன்றைய காலத்திற்கேற்ற நவீன வடிவமைப்புகளாக மாற்றுவதோடு, தங்க இறக்குமதிகள் மீது நமது நாடான இந்தியாவை சார்ந்திருப்பதை குறைப்பதனால் ஒரு மிகப்பெரியஎன்னைப் பொறுத்தவரை இந்த தங்க எக்ஸ்சேஞ்ச் திட்டம், ஒவ்வொரு இந்தியரும் பயன்படுத்த வேண்டிய, அதன்மூலம் வெற்றியை தனக்கும், நாட்டிற்கும் சாத்தியமாக்குகின்ற ஒரு சிறந்த முன்னெடுப்பாக இருக்கிறது, என்றார்.

படிக்க வேண்டும்

spot_img