குவாட்ரா சிஸ்டம்ஸ் நிறுவனம், தனது 25-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, புகழ்பெற்ற சுற்றுச்சூழல் தன்னார்வ அமைப்பான சிறுதுளியு டன் இணைந்து கோவை யின் சுற்றுச்சூழல் வளர்ச் சிக்கு ஒரு முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளது.
இந்த கூட்டு முயற்சி யின் ஒரு பகுதியாக, துடியலூர் ரயில் நிலையம் அருகே உள்ள நகர்ப்புற வனப்பகுதியில் 1,000 மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ் வில், கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் பங்கேற்று மரக் கன்றை நட்டு, விழாவைத் தொடங்கி வைத்தார்.
கோயம்புத்தூரின் பசுமைப் போர்வையை அதிகரிப்பதற்கான குவாட்ராவின் இந்த குறிப்பிடத்தக்க பங்களிப்பு, அதன் வெள்ளி விழா கொண்டாட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாகும்.
குவாட்ரா சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் இயக்குனர் பிரசாந்த் சுப்பிரமணியன் பேசுகையில், “கடந்த 25 ஆண்டுகளாக, எங்கள் வாடிக் கையாளர்களுக்கு எதிர் காலத்தை வடிவமைப்பதே எங்கள் நோக்கமாக இருந்து வருகிறது,” என்று தெரிவித்தார்.
நிறுவனத்தின் மற்றொரு இணை நிறுவனர் நாகராஜ் பொன்னுசாமி அவர்கள் பேசுகையில், “25 ஆண்டுகளை எட்டியது என்பது சிந்திக்க வேண்டிய தருணம். நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நிலையான வணிகங்களைக் கட்டமைக்க உதவுவது போலவே, சிறுதுளி உடனான இந்த கூட்டாண் மையானது, எங்கள் சொந்த நகரத்தின் நிலையான வளர்ச்சிக்கான எங்கள் உறுதிப்பாடாகும்,” என்று கூறினார்.
சிறுதுளி அமைப்பின் அறங்காவலர் வனிதா மோகன் கூறுகையில், “1,000 மரங்கள் வருங்கால சந்ததியினரின் பல்லுயிர் மற்றும் சூழலியல் ஆரோக்கியத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கும், என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் குவாட்ரா ஊழியர்கள், சிறுதுளி தன்னார்வலர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் என அனைவரும் ஒன்றிணைந்து பங்குகொண்டனர்.



