ஆதிலட்சுமி நகர் தெரு வாசிகள் சார்பில் விஜயதசமி முன்னிட்டு ஸ்ரீ விஜய கணபதி ஆல யத்தில் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் அண்ணாதுரை தலைமை தாங்கினார்.உத்ராபதி முன்னிலை வகித்தார்.
ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை காட்டப்பட் டது. தொடர்ந்து நோட்டு, புத்தகம், பேனா, பென்சில், உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அங்கு பயிலும் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வழங்கி னார்கள். காந்தி ஜெயந் தியை ஒட்டி அவரது உருவப்ப டத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத் தப்பட்டது. குழந் தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
முன்னதாக ராமு அழகு வரவேற்றார். நிறைவில் சரவணன் நன்றி கூறினார். இதில் அருண் பாபு, ஆர் எம் எஸ் மனோகர், ரகுராமன், குமார் உள்ளிட்ட தெருவாசிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்தபதி லயன் விஜயன் செய்திருந் தார்.



