தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் தூத்துக்குடி மாநகராட்சியும் இணைந்து மாநகரகப் பகுதிகளில் நாய்களுக்கு ரேபிஸ் வெறிநாய் தடுப்பூசி போடும் முகாமினை புதிய பேருந்து நிலையத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.
மேலும் மாநகர மக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு தடுப்பூசிகள் போட வேண்டுமென்றால் மாநக ராட்சியின் கட்டணமில் லாத இந்த 18002030401 எண்ணை தொடர்பு கொண்டால் உங்கள் அருகிலுள்ள மாநகராட்சி பூங்காக்கள் மாநகர மக்கள் கூடும் இடங்கள் ஆகிய பகுதிகளிலும் தெருக்களி லும் நேரடியாக வந்து ஊசி கள் போடப்படும் என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாநக ராட்சி ஆணையர் பிரி யங்கா மற்றும் நகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா சுகாதார அலுவ லர் ராஜசேகர் கால்நடை மருத்துவர் பழனி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



