fbpx
Homeபிற செய்திகள்தேனியில் பிஎஸ்என்எல் சார்பில் சாதனை விளக்கப்பேரணி

தேனியில் பிஎஸ்என்எல் சார்பில் சாதனை விளக்கப்பேரணி

தேனியில் பிஎஸ்என்எல் பொது நிறுவனம் சார்பில் 25 ஆண்டு வெள்ளிவிழா முன்னிட்டு தொலைத் தொடர்பு துறை சாதனைகளை விளக்கி பேரணி நடைபெற்றது.
தேனியில் பிஎஸ்என்எல் சார்பில் பிஎஸ்என்எல் ஆரம்பித்து 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து அக்டோபர் 1ஆம் தேதியன்று வெள்ளி விழா கொண்டாட உள்ள நிலையில் அதன் முன்னோட்டமாக பள்ளி குழந்தைகளுக்கு ஓவியப் போட்டி நடைபெற்றது. ஓய்வு பெற்ற அலுவலர்கள், பிஎஸ்என்எல் அலுவலர்கள், ஊழியர்கள், எப்டிடி ஹெச் பார்ட்னர், சேல்ஸ் பார்ட்னர் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆகியோ ருக்கு உணவு வழங்கியதோடு சால்வை அணிவித்து கௌர விக்கப்பட்டனர். தொடர்ந்து பிஎஸ்என்எல் அலுவலகத்தில் இருந்து கொட்டக்குடி ஆற்றுப் பாலம் வரை பழைய பேருந்து நிலையம் வழியாக சிறப்பு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில் மக்க ளுக்கு ஆற்றி வரும் சேவைகள் மற்றும் சலுகைகள் குறித்து ஒலிபெருக்கி மூலம் பொது மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு தேனி கோட்ட பொறியாளர் சபியா தலைமை தாங்கினார். துணை கோட்ட பொறியாளர் ராமர், அழகுராஜா முன்னிலை வகித்தனர். இளநிலை தொலைதொடர்பு அதிகாரி கணேசன், அலுவலர் கள் முனியாண்டி, கார்த்தி கேயன் ,முருக பிரபு, சுசிலா பெரியநாயகி, சத்தியபாமா, ஸ்டாலின் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடை பெற்ற இந்த நிகழ்ச்சியில் பிஎஸ்என்எல் அலுவலர்கள் பணியாளர்கள், ஓய்வு பெற்ற அலுவலர்கள், பணியாளர்கள், எப் டி டி ஹெச் பார்ட்னர், சேல்ஸ் பார்ட்னர் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img