கோவை செல்வபுரம் வியாபாரிகள் சங்கத்தின் 43 வது பொதுக்குழு கூட்டம் -2025 நடந்தது. இதில் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவராக டி.சிவசேகர், பொதுச்செயலாளராக டி.ஜான்தாமஸ், பொருளாளராக கே.ஜெயராஜ், துணைத்தலைவர்களாக எல்.ராஜாசிங், ஆலடி எஸ்.ஆனந்த், ஆர்.செல்லப்பாண்டி, செயலாளர்களாக எம்.துரைராஜ், எஸ்.சையத்ரசூல், வி.கனகராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கூட்டத்தில் முன்னாள் தலைவர்கள் எம்.ஜெயபாலன், வி.சி.நடராஜன், என்.பழனியப்பன், ஜி.கருப்பையா, வி.குமார், ஆலோசகர்கள் எஸ்.ஆர்.கருணாநிதி, ஏ.எஸ்.ரௌசன், சி.ஆர்.முத்துக்குமார், வசந்தம் ஏ.பாலன், கே.முருகேசன், பி.விஜயன், எம்.வீரமணிகண்டன் மற்றும் முன்னாள் நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.



