fbpx
Homeபிற செய்திகள்கோவை சகோதயா கூட்டமைப்பு பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டிகள் விவேகம் சீனியர் செகண்டரி பள்ளி முதலிடம்

கோவை சகோதயா கூட்டமைப்பு பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டிகள் விவேகம் சீனியர் செகண்டரி பள்ளி முதலிடம்

கோவை சகோதயா கூட்ட மைப்பு பள்ளிகளின் சார்பில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான மாணவர்களுக்கான கால்பந்து போட்டிகள் கோவை சந்திர காந்தி பப்ளிக் பள்ளியில் கடந்த 23ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.
போட்டியை சகோதயா கூட்டமைப்புப் பள்ளிகளின் சார்பாக சந்திர காந்தி பப்ளிக் பள்ளி முதல்வர் கருணாம்பிகேஸ்வரி துவக்கி வைத்தார். இதில் 12 ,14 வயதிற்குட்பட்ட பிரிவுகளில் மாணவர்களுக்கான போட்டி கள் நடைபெற்றன, அதில் 36 பள்ளிகளிலிருந்து 1098 மாணவர்கள் பங்கேற்றனர். கோவை, பொள்ளாச்சி, ஈரோடு, திண்டுக்கல், உடுமலை, மேட்டுப்பாளையம் போன்ற இடங்களிலுள்ள பள்ளி களிலிருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் பனி ரெண்டு வயதிற்குட்பட்ட பிரிவில் 29 பள்ளிகளும், பதினான்கு வயதிற்குட்பட்ட பிரிவில் 32 பள்ளிகளும் பங்கு பெற்றன.

செப்டம்பர் 23ஆம் தேதி பனிரெண்டு வயதிற்குட்பட்ட பிரி விற்கான போட்டிகள் தொடங்கின. அதற்கான இறுதிப் போட்டிகளும், பதினான்கு வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான போட்டிகள் செப்டம்பர் 24ஆம் தேதி நடைபெற்றன. விளையாட்டு வீரர்கள் தங்கள் முழுத் திறமைகளை மைதானத்தில் வெளிப்ப டுத்தினர்.
பனிரெண்டு வயதிட்குட்பட்டோர் பிரிவில் விவேகம் சீனியர் செகண்டரி பள்ளி முதலிடத்திலும், மேட்டுப்பாளையம் இரண்டா மிடமும், கேம்போர்டு இண் டர்நேசனல் பள்ளி மூன்றாமிடத்தையும், கோவை சிஎஸ் அகாடமி நான்காவது இடத்தையும் பெற்றுள்ளன.

பனிரெண்டு வயதிற்குட்டப்பட் டோர் பிரிவில் சிறந்த கால்பந்து வீரராக விவேகம் சீனியர் செகண்டரி பள்ளி மாணவன் நாவாசித்தார்த் மற்றும் சிறந்த கோல் கீப்பராக எஸ்எஸ்விஎம் பள்ளி (மேட்டுப்பாளையம்) மாணவன் தேவ்கிஷோர் தேர்ந்தெ டுக்கப்பட்டுள்ளார். போட்டியில் பங்கு பெற்ற அனைத்து மாண வர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்றவர் களுக்கு பதக்கங்களும், கோப்பை களும் வழங்கப்பட்டன.


14 வயதிற்குட்பட்ட மாணவர்க ளுக்கான போட்டிகளும் இறுதிப் போட்டிகளும் 25.09.2025 அன்று நடைபெற உள்ளது. அந்த மாணவர்கள் தங்களது முழுத்திறமைகளை வெளிக்காட்ட மிக ஆர்வமுடன் திகழ்கின்றனர்.
கால்பந்து போட்டிகளின் ஆய்வாளராக அன்னூர் நவபாரத் பள்ளியைச் சார்ந்த திரு.கணேஷ் அவர்களை நியமித்து இருந்தனர். சர்வதேச அங்கீகாரம் பெற்ற கால்பந்து பயிற்சியாளர் ஸ்ரீ கிருஷ்ணா தலைமையின் கீழ் கோவை கால்பந்து சங்கத்திலிருந்து 15 நடுவர்கள் கால்பந்து போட்டியை சிறப்பாக நடத்த உதவி புரிந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img