இந்தியாவில் மிகப்பெரிய கைத்தறி நிறுவனமாக விளங்கும் ஆப் டெக்ஸ் நிறுவனம் 1935 முதல் தொடங்கப்பட்டு 90 ஆண்டுகளாக தமிழக அரசு கைத்தறி நெசவாளர் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் தொடர்ந்து வேலைவாய்ப்பினை வழங்குவதற்காக விழாக் காலங்களில் 30 சதவீதம் வரை அரசு சிறப்பு தள்ளு படி வழங்கி வருகிறது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கரூரில் கோஆப் டெக்ஸில் தீபாவளி விற்பனையை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தனது குடும்பத்திற்கு சேலை மற்றும் சட்டை, வேஷ்டி உள்ளிட்டவைகளை 3,700 ரூபாய்க்கு வாங்கி விற்பனையை தொடங்கி வைத்தார். மேலும் புதிய வடிவமைப்புகளில் அசல் பட்டுடன் கூடிய சேலம் பட்டுப்புடவைகள் புதிய வடிவமைப்புடன் கூடிய மென்பட்டு புடவைகள் ஏராளமாக குவிந்துள்ளன.
மேலும் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.60 லட்சம் விற்பனைக்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
தீபாவளி சிறப்பு தள்ளபடியாக அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவ னங்களுக்கு வட்டி இல்லா கடன் வசதியில் 30 சதவீதம் வரையிலான தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சுதா, கோ- ஆப் டெக்ஸ் மேலாளர் பால சுப்பிரமணியன் நிலைய மேலாளர் மகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



