fbpx
Homeபிற செய்திகள்திருச்சி மாவட்டம் புதுக்குடி கிராம ஊராட்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில்நிதி உள்ளீட்டு செறிவூட்டல்  முகாம்...

திருச்சி மாவட்டம் புதுக்குடி கிராம ஊராட்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில்நிதி உள்ளீட்டு செறிவூட்டல்  முகாம் பல்வேறு சேவைகள் வழங்கி பிரசாரம்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி)  ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரை தேசிய அளவிலான ஜன சுரக்ஷா செறிவூட்டல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் லால்குடி வட்டாரம், புதுக்குடி கிராம ஊராட்சியில் நிதி உள்ளீட்டு செறிவூட்டல் முகாம் நடைபெற்றது.


இந்த நிகழ்வில் நிதி சேவைத்துறை (சென்னை) துணைச் செயலாளர் ஜெ.எஸ்.முகமது அஷ்ரப் முதன்மை விருந்தினராக பங்கேற்றார். சென்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மத்திய அலுவலக பொதுமேலாளரும் மாநில அளவிலான வங்கிக் குழு கன்வீனருமான என்.விஜயா, வங்கியின் திருச்சி பிராந்திய அலுவலக பொது மேலாளர் ஜி.ஸ்ரீராம் மற்றும் முக்கிய அலுவலர்கள் பங்கேற்றனர்.
இம்முகாமின்போது  PMSBY/PMJJBY/APY போன்ற திட்டங்களுக்கான பதிவுக் கவுன்டர்கள் அமைக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு மறு கேஒய்சி (Re-KYC) சேவை வழங்கப்பட்டது.


இப்பிரசாரமானது பெருநிதி உள்ளீடு மற்றும் சமூக பாதுகாப்புத் திட்டங்களின் அதிகபட்ச பங்களிப்பினை குறிப்பிட்டு நிகழ்த்தப்பட்டது. அப்போது பிரதம மந்திரியின் ஜன்தன் யோஜனா, பிரதம மந்திரி ஜீவன் ஜ்யோதி பீமா யோஜனா, பிரதம மந்திரி சுரக்ஷா யோஜனா, அடல் பென்ஷன் யோஜனா ஆகியவற்றுக்கு வங்கிக் கணக்கு திறப்பு மற்றும் உறுப்பினர் பதிவு செய்தல் போன்றவற்றை உள்ளிடக்கிய சேவைகள் வழங்கப்பட்டன.
கூடுதலாக உபயோகமற்று நிலுவையில் உள்ள செயல்படாத PMJDY கணக்குகளை மீட்கவும் மறு கேஒய்சி (Re-KYC ) ஆகியவற்றைப் புதுப்பித்தல், இட்டு வைப்பு (டெபாசிட்) கணக்குகளின் நியமனதாரர் நிலுவைகளைப் பதிவேற்றல் மற்றும் தீவிர நிதி அறிவுக் கூட்டங்களை ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட சேவைகளும் இப்பிரசார முகாமில் வழங்கப்பட்டது.


சைபர் மற்றும் டிஜிட்டல் மோசடிகளைத் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதோடு இந்திய ரிசர்வ் வங்கிக்கு மாற்றப்பட்ட கோரப்படாத இட்டு வைப்புகளை மீட்டெடுக்கும் நடைமுறைகள் மற்றும் வங்கிக் குறை கேட்பு அலுவலர் (ஓம்பட்ஸ்மேன்) பங்கு மற்றும் பயன்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
 இம்முகாமில் பல்வேறு வங்கிக் கிளைகளின் அலுவலர்கள், வணிகத் தொடர்பாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img