தமிழ்நாடு அரசு உயர் கல்வித்துறை சார்பாக அனைத்து கல்லூரிகளிலும் கல்லூரி கலை திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. நேற்று திருப்பூர் சிக்கண்ணா கலைக் கல்லூரியில் கலை திருவிழா நடைபெற்றது.
இதில் ஓவிய போட்டியும் நடைபெற்றது. அழிந்து வரும் கிராமிய கலைகள் என்ற தலைப்பில் போட்டிகள் நடைபெற்றது.
நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள். இந்த போட்டியில் திருப்பூர் மாவட்ட சுவரன் மாறன் கல்வி அறக்கட்டளை மற்றும் பிரகாஷ் ஆர்ட் கேலரி நிறுவனர் தர்மராஜ் நடுவராக பங்கேற்றார்.



