உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு, நேற்று (செப்டம்பர் 16) மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பாக, கோவை பெத்தநாயக்கன்பாளையம் அரசு பள்ளியில் உறுதிமொழி எடுத்தல், மரக்கன்றுகள் நடுதல், விழிப்புணர்வு பேரணி உள்பட பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
இதன் மூலம் ஓசோன் படலம் பாதுகாப்பின் அவசியம் பற்றி மாணவ மாணவிகளுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



