fbpx
Homeபிற செய்திகள்கோவை ஜி.கே.என்.எம் மருத்துவமனை வளாகத்தில் மாரத்தான் டி- சர்ட் வெளியீடு

கோவை ஜி.கே.என்.எம் மருத்துவமனை வளாகத்தில் மாரத்தான் டி- சர்ட் வெளியீடு

ஜி.கே.என்.எம் மருத் துவமனை சார்பாக இதயக் குறைபாடுகள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில் ‘ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்’ என்ற மாரத்தானின் மூன்றாம் பதிப்பு நடைபெறவுள்ளது.


கோவை கோ.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை, இதயக் குறைபாடுகள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகை யில், செப்டம்பர் 28-ஆம் தேதி ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ் என்ற விழிப்புணர்வு மாரத்தானை நடத்துகிறது.

செப்டம்பர் மாதம் குழந்தைகள் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாகவும், செப்டம்பர் 20-ஆம் தேதி உலக இதய தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது.

எனவே குழந்தைகளுக்கு ஏற்படும் இதயக் குறைபாடுகளை முன் கூட்டியே கண்டறிந்து உரிய நேரத்தில் சரியான சிகிச்சைகளை அளிப்பதன் அவசியத்தை உணர்த்த மாரத்தான் போட்டி நடைபெறுகிறது.

எனவே செப்டம்பர் 28ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 5:30 மணிக்கு கோவை, பாப்பநாயக்கன்பாளையம், மணி மேல்நிலைப்பள்ளியில் துவங்கும் இந்த மாரத்தானில் பங்கேற்க அழைப்பு விடுக்கிறோம். மூன்று வெவ்வேறு பிரிவுகளில் இந்த மாரத்தான் நடைபெறவுள்ளது.

இதில் வெற்றி பெறுபவர் களுக்கு ரொக்க பரிசு தொகை ரூ.75,000 அறிவிக்கப்பட்டுள்ளது. மாரத்தான் கோயம்புத்தூர் மாவட்ட தடகள சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாரத்தானை லக்‌ஷ்மி மில் மற்றும் லக்‌ஷ்மி கார்ட் கிளாத்திங் ஆகிய நிறுவனங்களும் இணைந்து நடத்துகின்றது. இதையொட்டி கோவை ஜி.கே.என்.எம் மருத்துவமனை வளாகத்தில் மாரத்தான் டி-சர்ட் மற்றும் பதக்கத்தின் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஜி.கே. என்.எம். மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி ரகுபதி வேலு சுவாமி உலகத் தரமான மருத்துவக் கருவிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ள ஜி.கே.என்.எம் குறித்து பேசினார்.

படிக்க வேண்டும்

spot_img