கோவை பிஎஸ்ஜி மேலாண்மை கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் கடந்த 12ம் தேதி அன்று நடைபெற்றது. அப்போது சங்கத்தின் புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தொடர்ந்து சங்கத்தின் புதிய தலைவராக டெல்லியில் உள்ள பருத்தி நிலைக்குழுவின் (CITI-CDRA) தலைவரும் கோவை சக்தி குழும நிறுவனங்களின் இயக்குநருமான டி.ராஜ்குமார், துணைத் தலைவர்களாக ஸ்ரீ நாகா எச்.பி. கேஸ் நிறுவன உரிமையாளர் யாமினி விஜய் மற்றும் DVIPL நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சி.ஆர்.சிவகுமார், பொருளாளராக Career Zone Worldwide இயக்குநர் எஸ்.பிரசன்னா கிருஷ்ணா, செயலாளராக PSGIM ஆசிரியர் டாக்டர் வி.ஹரிஷ், இணைச் செயலாளர்களாக பேக்கரோ நிறுவனர் ஜே.பிரவீணா மற்றும் ரத்னா குழுமத்தின் செயல் இயக்குநர் சரண்யா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
கடந்த மூன்றாண்டு காலமாக சிறப்பாக முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் வளர்ச்சிக்காக சீரிய பணியாற்றிய ரிச்மாண்ட் டேலண்ட் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ப்ரீத்தா எஸ்.பிரியதர்சினி தலைமையிலான நிர்வாகிகளுக்கு கூட்டத்தில் நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. புதிய நிர்வாகிகளுக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.



