தேனி பழைய பேருந்து நிலையம் அருகே தமமுக கிழக்கு மாவட்டம் சார்பில் இமானுவேல் சேகர் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்
தியாகி இமானுவேல் சேகரனாரின் 68-வது குருபூஜையை முன்னிட்டு பரமக்குடி செல்வதற்கு முன் தேனி பழைய பேருந்து நிலையம் அருகே தமமுக கிழக்கு மாவட்ட செயலாளர் மல்லர் பாலா தலைமையில் மாவட்ட தலைவர் வேந்தர் பாலா முன்னிலையில் அன்னாரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.
இந்த நிகழ்வில் தமமுக கிழக்கு மாவட்டம் சார்பில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் அப்போது மாவட்ட செயலாளர் மல்லர் பாலா கூறுகையில், தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை மத்திய மாநில அரசு எஸ்சி பட்டியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும், இமானுவேல் சேகரனாரின் குருபூஜை விழாவை தமிழக அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் எனவும் கூறினார்.



