fbpx
Homeபிற செய்திகள்கோவை கெம்பட்டி காலனியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

கோவை கெம்பட்டி காலனியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

கோவை தெற்கு தொகுதி, 80வது வார்டிற்கு உட்பட்ட கெம்பட்டி காலனி தர்மராஜாகோவில் பகுதியில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற்றது.

இந்த முகாமை முன் னாள் சட்டமன்ற உறுப்பினர், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் பார்வையிட்டார்.

மாநகராட்சி சுகாதார பணிக் குழு தலைவர் டாக்டர் மாரிச்செல்வன் முன்னிலையில் நடைபெற்ற இந்த முகாமில் 13 க்கும் மேற்பட்ட அரசுத்துறை, 43 க்கும் மேற்பட்ட சேவைகள், கலைஞர், மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்கள் வாங்கப்பட்டன.

இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் .

இந்த முகாமில் மத்திய மண்டல துணை ஆணையர் செந்தில் குமரன், திமுக தகவல் தொழில் நுட்பத்துறை இணைச்செயலாளர் டாக்டர். மகேந்திரன், பகுதி கழக செயலாளர் முருகேசன், வார்டு செயலாளர்கள் தங்கவேல், டவுன் ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img