கோவை கேம்போர்டு சர்வதேச பள்ளி, கேம்போர்டு ஃபெதர் ஃப்ளைட் பேட்மிண் டன் போட்டி 2025ஐ வெற்றிகரமாக நடத்தியது. விளையாட்டு உணர்வை வளர்ப்பதற்கும் இளம் திறமை யாளர்களை ஊக்குவிப் பதற்கும் வடிவமைக்கப்பட்ட இந்தப் போட்டியில், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாண விகள் பங்கேற்றனர்.

இந்தப் போட்டி 9 வயதுக்குட்பட்டோர், 11 வயதுக்குட்பட்டோர் மற்றும் 13 வயதுக்குட்பட்டோர் பிரிவுகளில் சிறுவர் மற்றும் சிறுமியர் இருவருக்கும் நடத்தப்பட்டது.
இது வளர்ந்து வரும் வீரர்கள் தங்கள் திறமைகள், ஒழுக்கம் மற்றும் விளையாட்டுத் திறனை வெளிப்படுத்த ஒரு துடிப்பான தளமாக அமைந்தது. போட்டிகள் முழுவதும் இளம் விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் ஆற்றல், சுறுசுறுப்பு மற்றும் உறுதியை வெளிப்படுத்தியதால், மைதானத்தில் ஆரவாரங்கள் எதிரொலித்தன. நிகழ்ச்சியில் பேசிய பள்ளி முதல்வர் டாக்டர் பூனம் சயால், “கேம்போர்டு பள்ளி யில், குழந்தைகள் கல்வி ரீதியாக மட்டுமல்லாமல், விளை யாட்டுகள் மூலமாகவும் வளர முழுமையான வாய்ப்புகளை வழங்குவதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம், இது மீள் தன்மை, கவனம் மற்றும் குழு உணர்வை உருவாக்குகிறது. ஃபெதர் ஃப்ளைட் போட்டி இந்த நம்பிக்கையின் கொண்டாட் டமாகும்” என்றார்.

இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் விவரம் வருமாறு:
9 வயதுக்குட்பட்ட சிறுவர் கள்: வெற்றியாளர் (வின்னர்)- ஷம்ருத் (psbb).
9 வயதுக்குட்பட்ட சிறுமியர்: வெற்றியாளர் – அக்ஷரா கைலாஷ் (தி கேம்போர்ட் இன்டர்நேஷனல் பள்ளி).
11 வயதுக்குட்பட்ட சிறுவர்கள்: வெற்றியாளர் – சஞ்சய் (சுகுணா பிப்ஸ்).
11 வயதுக்குட்பட்ட சிறுமியர்: வெற்றியாளர் அத்விகா (ரமணி யின் பேட்மிண்டன் அகாடமி).
13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள்: வெற்றியாளர்: சித்தேஷ்வர் (spn ஸ்கூல் ஆப் பேட்மிண்டன்).
13 வயதுக்குட்பட்ட சிறுமியர்: வெற்றியாளர் – அக்ஷிதாஸ் (தி கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளி).பரிசளிப்புடன் விழா நிறைவடைந்தது. வெற்றி யாளர்களும் இரண்டாம் இடத்தைப் பிடித்தவர்களும் கோப்பைகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். கேம் போர்டு சர்வதேசபள்ளி, விளையாட்டு மற்றும் இணை பாடத்திட்ட சிறப்பை ஊக் குவிப்பதில் தொடர்ந்து முன் னணியில் உள்ளது. மாணவர்கள் உயர்ந்த இலக்கை அடையவும், அவர்களின் முழு திறனை அடை யவும் ஊக்குவிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை கேம்போர்டு பள்ளி தலைவர் என்.அருள் ரமேஷ், தாளாளர் பூங்கோதை அருள் ரமேஷ் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.



