fbpx
Homeபிற செய்திகள்டெல்லியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக்கு விருது

டெல்லியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக்கு விருது

டெல்லியில் இந்திய வர்த்தக சபை நடத்திய 3வது எமெர்ஜிங் ஏசியா வங்கி மாநாட்டில் தமிழ் நாடு மெர்க்கன்டைல் வங்கிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியை தலை மையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி 100 ஆண் டுகளுக்கும் மேலான சிறந்த சேவையுடன், இந்தியாவின் மிகவும் நம்பகமான தனி யார் வங்கிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. தமிழ் நாடு மெர்க்கன்டைல் வங்கி சொத்து தரம் , லாபத்திறன் மற்றும் அபாய மேலாண்மை ஆகிய துறைகளில் வெளிப்படுத்திய சிறப் பான செயல்திறனை அங் கீகரித்து, டெல்லியில் நடைபெற்ற இண்டியன் சேம்பர் ஆப் காமர்ஸ் நடத்திய 3வது எமெர்ஜிங் ஏசியா வங்கி மாநாடு மற்றும் விருதுகள் விழாவில் கௌரவிக்கப்பட்டுள்ளது.

இந்த சாதனை குறித்து கருத்து தெரிவித்த வங்கியின் மேலாண்மை குழு, “இந்த விருது எங்கள் நிலையான வளர்ச்சியும் வாடிக்கையாளர் நம்பிக்கை யும் குறித்த உறுதியான கவனத்தை பிரதிபலிக்கிறது. இந்த வேகத்தை தொடர்ந்தும் மேம்படுத்தி, வங்கி துறையில் மிக உயர்ந்த தரநிலைகளைப் பின்பற்றுவோம்” என தெரிவித்துள்ளது.
டி.எம்.பி வங்கியின் நேர்மையான நடைமுறைகள், வலுவான அபாய மேலாண்மை மற்றும் தொடர்ந்து நிலைத்த லாபம் ஆகியவற்றின் மீது கொண்ட உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறது. இது இந்திய வங்கி துறையில் புதிய சிறப்புத் தரங்களை அமைத்துள்ளது.
இந்த வங்கியானது, இந்தியா முழுவதிலும் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 588 கிளைகள் மற்றும் 12 மண்டல அலுவலகங்களை கொண்டு சுமார் 53 லட்சத்துக்கும் மேலான வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சேவை ஆற்றி வருகிறது

படிக்க வேண்டும்

spot_img