காவேரி மருத்துவமனை வடபழனி, “காவேரி-SAC” என்ற பிரத்யேக விளையாட்டு மருத்துவம் மற்றும் ஆர்த்ரோஸ்கோபி மையத்தை தொடங்கியிருக்கிறது.
இம்மாநகரில் மேம்பட்ட எலும்பியல் சிகிச்சையில் ஒரு புதிய தரநிலையை நிர்ணயிப்பது இம்மையத்தின் குறிக்கோளாகும்.
இளம் வயதினருக்கும் மற்றும் சுறுசுறுப்பாக இயங்குபவர்களுக்கும் உடல் மூட்டுகளின் ஆரோக்கியத்தை ஆரம்பத்திலேயே பாதுகாப்பதற்கும் மற்றும் முந்தைய இயல்புநிலையை மீட்டெடுப்பதற்கும், குருத்தெலும்பு புத்துருவாக்க சிகிச்சை (cartilage regenerative therapy) போன்ற அதிநவீன தீர்வு களையும் இம்மையம் வழங்கும்.
மூட்டுகளின் நிலையற்ற தன்மை அல்லது காயங் களால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆர்த் ரோஸ்கோபி சிகிச்சை செயல்முறையை எளிதில் அணுகக்கூடியதாக மாற்று வதே வடபழனி – காவேரி மருத்துவமனையின் நோக் கமாகும்.
இது குறித்து காவேரி மருத்துவமனையின் முது நிலை எலும்பியல் சிகிச்சை நிபுணர் மருத்துவர் ரவி சங்கர் கிருபானந்தன் பேசுகையில், “ACL தசைநார் கிழிவு, சுழற்சிப் பட்டை காயங்கள் மற்றும் மூட்டுப்பகுதி தசை குருத்தெலும்பு பாதிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு, மிகக் குறைந்த ஊடுருவலுடனும், விரைவான மீட்சியுடனும் சிகிச்சையளிக்க ஆர்த்ரோஸ்கோபி உதவுகிறது.
நோயாளிகள், 6 மணி நேரத்திற்குள் நடக்கத் தொடங்கி, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும். இது விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் வலியில் லாத வாழ்க்கையை தரக்கூடிய ஒரு சிகிச்சை முறையாகும்“ என்றார்.
காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் நிர்வாக இயக்குநரும் இணை நிறு வனருமான டாக்டர். அரவிந்தன் செல்வராஜ், பேசுகையில் “சென்னை மாநகர மக்களுக்கு ஆர்த்ரோஸ்கோபி சிகிச்சை செயல்முறைக்கான ஒரு உலகத் தரம் வாய்ந்த மையம் இயங்குவதை உறுதி செய்கிறது.
உலகத் தரம் வாய்ந்த மூட்டுப் பாதுகாப்பு மற்றும் சிகிச்சை வசதிகள் வட பழனியிலேயே இப்போது கிடைக்கிறது என்பதை ஒவ்வொருவரும் அறிய வேண்டும்,” என்று குறிப் பிட்டார்.
விழாவின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்திய கிரிக் கெட் வீரர் சாய் கிஷோர், காவேரி-SAC போன்ற ஒரு மையம், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமின்றி, அதே தரமான சிகிச்சைக்குத் தகுதியான ஒவ்வொரு தனி நபரையும் மையமாகக் கொண்டிருப்பது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது” என்றார்.



