fbpx
Homeபிற செய்திகள்சோனா கல்லூரியின் அறிவியல், தொழில்நுட்ப மையம்: சுற்றுலாத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்

சோனா கல்லூரியின் அறிவியல், தொழில்நுட்ப மையம்: சுற்றுலாத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்

சோனா தொழில்நுட்பக் கல்லூரி இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் செக்காரப்பட்டியில் அமைந்துள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தினை சுற்றுலாத் துறை அமைச்சர்
இராஜேந்திரன் துவக்கி வைத்தார்.


சோனா தொழில்நுட்பக் கல்லூரி அரசின் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம் செக்காரப்பட்டியில் அமைந்துள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.


சோனா கல்வி நிறுவனங்களின் தலைவர் வள்ளியப்பா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சோனா தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார்.


இதனைத்தொடர்ந்து அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் முதன்மை ஆய்வாளர் சத்தியபாமா திட்ட விளக்க உரையாற்றினார். பின்னர் சந்தியூர், வேளாண்மை கழக திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள் வாழ்த்துரை வழங்கினார்.


இந்த விழாவில் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.


இந்த விழாவில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை அமைச்சர் இராஜேந்திரன்அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தை துவக்கி வைத்து, விவசாயிகளின் வாழ் வாதாரத்தை மேம்படுத்துதல், இளைஞர்களை தொழில் முனைவோராக மாற்றுதல், மகளிர் சுய உதவிக்குழுக்களை மேம்படுத்துதல், போன்ற செயல்களை முன்னெடுத்து இத்திட்டத்தின் மூலம் செயல்படுத்தி வரும் சோனா கல்வி நிறுவனத்திற்கு பாராட்டுகளை தெரிவித்தார்.


இதனைத்தொடர்ந்து பேசிய சோனா கல்வி நிறுவனத்தின் தலைவர் வள்ளியப்பா சோனா நிறுவனம் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் பொது மக்க ளுக்கு ஏராளாமான வாய்ப் புகளை வழங்கி வருகின்றது. இத்திட்டத்தின் மூலம் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருதல் போன்ற ஏரளமான வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றது.
இந்த நிகழ்வில் ஒமலூர் வட்டம் செக்காரப்பட்டி பொதுமக்கள், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


இறுதியாக இத்திட்டத்தின் இணை ஆய்வாளர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img