fbpx
Homeபிற செய்திகள்‘ஆபரேஷன் கிளீன் கோவை’: மாவட்டம் முழுவதும் போலீஸ் அதிரடி சோதனை

‘ஆபரேஷன் கிளீன் கோவை’: மாவட்டம் முழுவதும் போலீஸ் அதிரடி சோதனை

கோவை மாவட்டத்தில் போதைப் பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்கும் நோக்கிலும், குற்றங்கள் இல்லா கோவையை உருவாக்கும் நோக்கிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கே.கார்த்திகேயன், நேரடி மேற்பார்வையில் பல்வேறு அதிரடித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்ட குற்றவாளிகளை கண்டறியும் பொருட்டும்., சட் டத்திற்கு புறம்பான செயல்களை செய்யும் நோக்குடன் தங்கி உள்ள நபர்களை கண்டறிந்து குற்றங் களை தடுக்கும் பொருட்டும் நேற்று (24ம் தேதி) அதிரடி நடவடிக்கையாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில் ஆபரேஷன் கிளீன் கோவை “Operation – CLEAN COVAI” என்ற அதிரடி நடவடிக்கை மாவட்டம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக மாவட்டம் முழுவதும் உள்ள காவலர்கள் ஈடு படுத்தப்பட்டனர். கருமத்தம்பட்டி மற்றும் பேரூர் காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலை மையில் 91 குழுக்களாக 412 காவலர்கள் பணியில் அமர்த்தப் பட்டுள்ளனர்.
மேலும், கோவை மாவட்டத்தில் இதுபோன்ற அதிரடி நடவடிக் கைகளால் அனைத்து மாநிலம் மற்றும் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குற்றவாளிகள் மற்றும் குற்றத்தை செய்யும் நோக்கில் தஞ்சமடையும் அனைத்து நபர் களுக்கும் நெஞ்சில் அச்சத்தை விளைவித்துள்ளது. இது போன்ற எதிர்பாராத அதிரடி நடவடிக் கைகளால் கோவை மாவட்டத்தில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது பொது மக்கள் இது போன்ற அதிரடி நடவடிக்கையை வெகுவாக பாராட்டுகின்றனர்.

படிக்க வேண்டும்

spot_img