fbpx
Homeபிற செய்திகள்‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாமில் நலஉதவிகள் வழங்கிய மார்கண்டேயன் எம்எல்ஏ

‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாமில் நலஉதவிகள் வழங்கிய மார்கண்டேயன் எம்எல்ஏ

ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், சில்லாங்குளம் முத்துக்கருப்பன் உயர் நிலைப்பள்ளியில் குதிரைக்குளம், சில்லாங் குளம், முரம்பன், சங்கம் பட்டி, ஓட்டநத்தம் உள் ளிட்ட ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடைபெற்ற உங்களுடன்_ஸ்டாலின் சிறப்பு முகாமை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் துவக்கி வைத்து. வருவாய்த்துறை சார்பில் பட்டா பெயர் மாற்றுதல் பணி ஆணை மற்றும் வேளாண்மைத் துறை சார்பில் நல உதவி களை வழங்கினார்.

நிகழ்வில் ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவஹர், ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அறிவழகன், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் சுசிலா, ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவ நீதக்கண்ணன், பள்ளி தாளாளர் பாலமுருகன், எப்போதும் வென்றான் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், சோலை சாமி திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் முத்துக்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற
தலைவர் சரோஜா கருப்பசாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் முத்துராஜ், மாவட்ட பிரதிநிதி சத்தியராஜன், குதிரைக்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகையா, கிளை செயலாளர்கள் அய்யம்பிள்ளை, ரகு, விநாயகம், பெருமாள்சாமி, கணேசன் உள்ளிட்ட பொதுமக்கள், துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img