கோபி பி.கே.ஆர் மகளிர் கல்லூரியில் வணிகவியல் துறையின் சார்பில் “வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களை பயன்படுத்துதலில் இந்தியா சீனா மற்றும் இலங்கையின் பார்வை” எனும் தலைப்பில் ஒருநாள் சர்வதேச மாநாடு நடைபெற்றது.
இந்நிகழ்வில் பி.வெங்கடாசலம் (செயலாளர் மற்றும் நிர்வாகி), எஸ்.ஏ. தனலட்சுமி (துணை முதல்வர்), மற்றும் டாக்டர் பி.நடேசன் (வணிகவியல் துறை டீன்) பங்கேற்றனர்.
இலங்கை தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின், மேலாண்மை மற்றும் வணிகவியல் துறை பேராசிரியர் முனைவர் மஹ்ரூப் பர்விஸ், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின், மேலாண்மை மற்றும் வணிக வியல் துறை பேராசிரியர் முனைவர் முஹமது இஸ்மாயில் முஹமது ரியாத், குவான்சி மினஸு பல் கலைக்கழகத்தின் கணக்கியல் மற்றும் நிதி துறை பேராசிரியர் முனைவர் சோணை சிங்காரம் ஜெயராஜ், ஐஐடி மெட்ராஸ், மேலாண்மை துறை பேராசிரியர், முனைவர் ஜி அருண்குமார் சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியில் முனைவர் அ. ரஹமத் நிஷா நன்றி கூறினார்.



