இயேசு அழைக்கிறார் பெதஸ்தா பிரார்த்தனை மையம், இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை, கோவை காருண்யா நகரில் அமைந்துள்ள அமைதி வளாகத்தில் கொண்டாடியது. மூவர்ண தேசியக் கொடியை கோவை வருமானவரி இணை ஆணையாளர் ஆர்.மலர் கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
அவர் பேசுகையில், இந்தியா பெற்ற கடின மான சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை அவர் நினைவூட்டினார்.
மற்றும் ஒவ்வொரு குடிம கனும் நாடு கட்டமைப்பில் வகிக்கும் முக்கியப் பங்கை வலியுறுத்தினார். நாம் நமது அடையாளம் மற்றும் பொறுப்புகளில் பெருமை கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் இந்த நன்நாளில், இயேசு அழைக்கிறார் மற்றும் காருண்யா தொழில்நுட்பக் கல்லூரியின் நிறுவனர் மறைந்த டாக்டர் டி.ஜி.எஸ் தினகரனின் 90வது பிறந்த ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, டாக்டர் பால் தினகரன் வழிநடத்துதலின்படி பார்வைத் துயருற்ற நபர்க ளுக்கு உதவிப் பொருட்கள், வானொலி, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகள் ஆகியவை பெத ஸ்தா பிரார்த்தனை மையம் மூலம் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்தும் மக்கள் பெதஸ்தா பிரார்த்தனை மையத்திற்கு வந்து, ஆசீர் வாதத்தை பெற்றுக் கொண் டதுடன், சிறுவாணி மலை களால் சூழப்பட்ட ஆன்மீக சூழ்நிலையில் அமைதியுடன் நேரம் கழித்தனர்.



