fbpx
Homeபிற செய்திகள்முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்: கடலூர் மாவட்டத்தில் 65,120 பேர் பயனடைவர்- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்: கடலூர் மாவட்டத்தில் 65,120 பேர் பயனடைவர்- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின்கீழ் கடலூர் மாவட்டத்தில் 49.363 குடும்ப அட்டைகளில் உள்ள 65,120 பயனாளர்களுக்கு அவர் தம் இல்லங்களிலேயே பொருட்களை விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சிதம்பரம் கடவாச்சேரியில், வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம். மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார். காட்டுமன்னார்கோவில் சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலையில், முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை துவக்கி வைத்து, மூத்த குடிமக்களின் இல்லங்களுக்கு சென்று ரேஷன் பொருட்களை வழங்கினார்.

தொடர்ந்து அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர், ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார்கள்.

குறிப்பாக பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் சென்று சேரும் வண்ணம் மக்களுடன் முதல்வர் திட்டம், பொது மக்களின் வீடுகளுக்கே சென்று குறைகளை கேட்டு களையும் வண்ணம் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்குவதற்கு சிரமப் படுவதை களைவதற்காகவும், அனைவருக்கும் சமூகப் பாதுகாப் பினை உறுதிசெய்திடும் வகையிலும் முதலமைச்சர், வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று, பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் என்ற சிறப்புத் திட்டத்தை சென்னையில் தொடங்கி வைத்தார்.

மக்கள் நலன்சார்ந்த இத் திட்டம் சிறப்புக் கவனம் தேவைப்படும் பிரிவினரின் வாழ்வை மேம்படுத்துவது உணவு பாதுகாப்பில் உறுதி செய்யும் இத்திட்டத்தின் வாயிலாக கடலூர் மாவட்டத்தில் 1460 நியாயவிலை கடைகளைச் சேர்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களைக் கொண்ட 44,312 குடும்ப அட்டைகளில் உள்ள 60,069 பயனாளர்களும், 5,051 குடும்ப அட்டைகளில் உள்ள 5,051 மாற் றுத்திறனாளிகளும் என மொத்தம் 49,363 குடும்ப அட்டைகளில் உள்ள 65,120 பயனாளர்களுக்கு அவர்தம் இல்லங்களிலேயே பொருட்களை விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும், இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டிற்கு சென்று பொருட்கள் வழங்கப்பட உள்ளது. மேலும், கைரேகை சரியாக பதியாத முதியவர்களுக்கு கண் கருவிழியை ஸ்கேன் செய்யும் முறையிலும் பொருட்கள் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வரு வாய் அலுவலர் ராஜசேகரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் இளஞ்செல்வி மற்றும் திமுக ஒன்றிய செயலாளர் கள் சங்கர், நடராஜன், ராஜேந்திர குமார், அண்ணாமலை நகர் பேரூராட்சி தலைவர் பழனி, பொதுக்குழு உறுப்பினர் மஞ்சு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல கீரப்பாளையத்தி லும் அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர் செல்வம் தாயுமானவர் திட்டத் தைத் தொடங்கி வைத்தார்.

மேலும் அங்கிருந்த மூதாட்டிகள் மற்றும் பொது மக்களிடம், அரசின் நலத் திட்டங்கள் அனைத்தும் வருகி றதா. மகளிர் உரிமைத் தொகை கிடைக்கிறதா என கேட்டறிந்தார். அதற்கு பொது மக்கள், திட்டங்கள் அனைத்தும் கிடைப்பதாக
மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

நிகழ்வில் கீரப்பாளையம் ஒன்றிய திமுக செயலாளர்கள் சபாநாயகம், வாள் கரை மேடு பாலு, முன்னாள் கவுன்சிலர் கீர்த்திவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img