fbpx
Homeபிற செய்திகள்பி.கே.ஆர். கலைக் கல்லூரி - நாஸ்காம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

பி.கே.ஆர். கலைக் கல்லூரி – நாஸ்காம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரி, நாஸ்காம் நிறுவனத்துடன் இணைந்து, செவ்வாய்க் கிழமை “உங்களில் முதலீடு செய்யுங்கள் – புத்திசாலித்தனமான தொழில் உத்தி” என்ற தலைப்பில் ஒரு தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சியை நடத்தியது.

மாணவர்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில், நாஸ்காம் மற்றும் பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரி இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் தொழில்களுக்குத் தேவை யான திறன்களை பட்டதாரிகளுக்கு வழங்க சிறப்பு பயிற்சி, வழிகாட்டுதல் திட்டங்கள் மற்றும் தொழில்துறை பயிற்சிகளை வழங்குவதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.

கல்லூரி செயலாளர் பி.என்.வெங்கடாசலம் மற்றும் துணை முதல்வர் எஸ். ஏ.தனலட்சுமி விழாவிற்கு தலைமை தாங்கினர்.

சிறப்பு விருந்தினராக நாஸ்காம் இயக்குநர் மற்றும் மாற்றம் அறக்கட்டளையின் இணை நிறுவனருமான வி.உதய சங்கர் சிறப்புரையாற்றினார்.

படிக்க வேண்டும்

spot_img