நீதித் துறையில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக கோவை மாவட்ட சிறப்பு அரசு வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்திக்கு விருது வழங்கப்பட்டது.
கோவையில் இந்திய சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, சமூகத்தில் சிறந்த பங்களிப்பு செய்து வருபவர்களை கவுரவித்து விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
டாக்டர் ஜெயராஜமூர்த்தி தலைமை தாங்கினார். விழாவில் அரசு நீதித்துறை, காவல் துறைக்கு சிறப்பான சேவையாற்றியதற்காக கோவை சார்பு நீதிமன்றங்களின் அரசு தரப்பு கூடுதல் வக்கீல் பி.கிருஷ்ணமூர்த்திக்கு `நீதி செம்மல்’ விருது வழங்கி கௌரவிக்கப் பட்டது.
இது குறித்து வக்கீல் பி.கிருஷ்ணமூர்த்தி பேசும்போது, “இந்த விருது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
இதற்காக எனக்கு பணியாற்றக் கூடிய வாய்ப்பை கொடுத்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கொங்கு மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி. தி.மு.க. சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோவன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
காவல் துறை சார்பில் வக்கீல் பி.கிருஷ்ணமூர்த்திக்கு ஏற்கனவே ‘கிங் ஆப் கன்விக்சன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதை தொடர்ந்து கூடுதல் சிறப்பு வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்திக்கு திமுக மூத்த வழக்கறிஞர்கள் அணி நிர்வாகிகள், சக வழக்கறிஞர்கள் பாராட்டு தெரிவித்தனர்.



