Homeபிற செய்திகள்மூலிகை செடிகள் விநியோகம்

மூலிகை செடிகள் விநியோகம்

79வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாசம் அறக்கட்டளை சார்பில் மூலிகைச் செடிகளை ஈரோடு வீரப்பன் சத்திரம் மாநகராட்சி நகர்ப்புற சுகாதார மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் அதன் நிறுவனர் தலைவர் ஆர்.விபுல் சாண்டலியா, பொது மக்களுக்கு வழங்கினார்.

150 விதைகள் கொண்ட 200 விதை பைகள் மற்றும் பிரண்டை, நந்தியாவட்டம், நெல்லிக்காய், தூதுவளை, அரளி, செம்பருத்தி, துளசி, அதிமதுரம், எலுமிச்சை புல், பணச்செடி, கருப்பு துளசி, கருப்பு மஞ்சள் போன்ற மூலிகை செடிகள் விநியோகம் செய்யப்பட்டன.

மாநகராட்சி மண்டல தலைவர் பி.கே.பழனிசாமி, பிரசாத், சித்திரராசு, இ.எஸ்.வாசுதேவன், அறங்காவலர்கள், நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img