தூத்துக்குடி மாவட்ட யோகீஸ்வரர் மற்றும் மாநில யோகீஸ்வரர் சமுதாயம் சார்பில் கலைஞர் அரங்கில் 2024 மற்றும் 2025 கல்வி ஆண்டில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12.ஆம் வகுப்பு மற்றும் விளையாட்டுப் போட்டிகளிலும் பேச்சு போட்டிகளிலும் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது
மாநிலத் தலைவர் ராஜகோபால் யோகீஸ்வரர் தலைமை தாங்கினார். மாநில செயல் தலைவர் ராஜமுருகன் யோகீஸ்வரர், தூத்துக்குடி மாவட்ட தலைவர் இசக்கி முத்து என்ற கண்ணன் யோகீஸ்வரர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில பொதுச் செயலாளர் செல்வ கேசவன், நிர்வாக செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் சுரேஷ் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினார்கள்.
மருத்துவர்கள் ஜெய பாஸ்கர், மற்றும் உமா ஜெயா பாஸ்கர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். சண்முகையா, கன்னியாகுமரி மாவட்ட தலைவர் நடராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன் என்ற ரவி நன்றி கூறினார்.
பேச்சுப் போட்டியில் தமிழக முதல்வர் பரிசு பெற்ற கவிலன் அவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்கள் சிலம்பத்தில் பரிசு பெற்ற ஸ்ரீஹரி அவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்கள். 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற கயல்விழி நாச்சியார் அவர்களுக்கும் நேத்ரா ராகவி அவர்களுக்கும் குரு விஷ்ணு அவர்களுக்கும் பரிசு வழங்கி பாராட்டினார்கள்
அதுபோல் 10 ஆம் வகுப்பில் முதல் பரிசு பெற்ற ஆதிரா அவர்களுக்கும் இரண்டாம் பரிசு பெற்ற பிருந்தா அவர்களுக்கும் மூன்றாம் பரிசு பெற்ற ஸ்ரீஜா அவர்களுக்கும் ரிஷிகேசன் அவர்களுக்கும் பரிசு வழங்கி பாராட்டினார்கள் தொடர்ந்து யோகீஸ்வரர் சமுதாய மாநாட்டில் 6. தீர்மானங்கள் போடப்பட்டது
- சிவ வழிபாடுகளில் சிவ ஆல யங்களோடும் தொடர்புடைய சமுதாயமான எங்கள் சமுதாயத்திற்கு இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் கோயில்களில் வேலை வாய்ப்பு வரும் பொழுது தனி ஒதுக்கீட்டின் மூலமாக முன்னுரிமை தர வேண்டும் என்றும்
- பூக்கட்டும் தொழிலாளர்களுக்கு தனி வாரியம் அமைத்து அவ்வாரியத்தின் உறுப்பினர்களில் ஒருவரை யோகிஸ்வரர் சமுதாயத்தில் இருந்து தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும்
- யோகேஸ்வரர் சமுதாயத்தை சார்ந்தவர்கள் கிராமம் கோவில்களில் பூசாரிகளாக உள்ளனர் எனவே கிராம கோயில் பூசாரிகள் நல வாரிய உறுப்பினர்களில் யோகீஸ்வரர் சமுதாயத்தைச் சார்ந்தவர்களை நியமிக்க வேண்டும்
- தென் மாவட்ட கோயில்களில் அறங்காவலர் குழுவை நியமிக்கும் போது யோகீஸ்வரர் சமுதாயத்தில் உள்ள தகுதி மிக்கவர்களை அறங்காவலர் குழு தலைவராகவோ உறுப்பினராகவோ நியமிக்க வேண்டும்
- காருக்குறிச்சி அருணாச்சலம் அவர்களின் பெயரில் அவர் வாழ்ந்த கோவில்பட்டியில் அவரது பெயரால் ஒரு மணிமண்டபமும் நாதஸ்வர இசை வரலாற்றை விளக்கும் அருங்காட்சியகமும் அமைக்க வேண்டும்
- ஆண்டுதோறும் திருச்செந்தூரில் மாசி திருவிழாவில் ஒரு நாள் முருகன் புகழை நாதஸ்வரத்தால் வாசித்து பெருமை சேர்த்த காருக் குறிச்சி அருணாசலத்தின் நினைவை போற்றும் வண்ணம் ஒரு நாள் முழுவதும் தமிழ்நாட்டின் முன்னணி நாதஸ்வர மேதைகள் பங்கேற்கும் நாதஸ்வர இசை வேள்வியை அரசு ஏற்பாடு செய்து நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசை. கேட்டுக் கொண்டனர்
இந்நிகழ்வில் தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் இருந்து யோகீஸ்வரர் சமுதாய சார்பில் பலர் வருகை தந்து சிறப்பித்தனர்.



