கோவை ஆவரம்பாளையம் கோ இண்டியா ஹாலில், ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் ரைஸ்-இன் சார்டர் வழங்கும் விழாவும், பதவியேற்பு விழாவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்த புதிய கிளப், ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன் சார்பாக ஸ்பான்சர் செய்யப்பட்டது. இது ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3206-க்கு ஒரு முக்கியமான புதிய சேர்க்கையாகும்.
மாவட்ட ஆளுநர் செல்லா கே.ராகவேந்திரன் விழாவின் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டு, சார்டர் சான்றிதழை வழங்கி, அர்த்தமுள்ள தலைமைத்துவம் மற்றும் சமூக சேவையின் அவசியத்தைப் பற்றிய உரையாற்றினார்.
இந்த புதிய கிளப்பை வழிநடத்தி உருவாக்கும் பணியில் முக்கிய பங்கு வகித்த மாவட்ட ஆளுநரின் சிறப்பு பிரதிநிதி எம்.டி.காட்வின் மரியா விசுவாசத்துக்கு விழாவில் நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.
கோயம்புத்தூர் டவுன் டவுன் கிளப் தலைவர் ஸ்ரீநாத், செயலாளர் விக்ரம், மாவட்ட இயக்குநர் அங்கி தா தினேஷ், துணை கவர்னர் விஜயராகவன், நேதாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சந்திரசேகர் ராமநாதன், சார்டர் தலைவர் ஆகவும், தண்டபாணி சார்டர் செயலாளர் ஆகவும் பதவியேற்றனர். கிளப்பின் மற்ற நிர்வாகிகள் மற்றும் குழு உறுப்பினர்களும் 2025-26 ஆண்டிற்காக பதவியேற்றனர்.
கிளப்பின் முதல் நாளில்வே சமூக சேவைகள் தொடங்கப்பட்டன.
தகுதியுள்ள மாணவிகளுக்குப் கல்வி உதவித் தொகை, முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்குப் மருத்துவ உதவி வழங்கப்பட்டதோடு முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குச் சத்தான உணவுகளும் வழங்கப்பட்டது.



