கோவை கிரெடாய் அமைப் பின் சார்பில் நடத்தப்படும் ஆண்டு விழாக்களில் முக்கியமா னது “ஃபேர்புரோ 2025” வீட்டு கண்காட்சி இன்று ஆகஸ்ட் 8-ம் தேதி துவங்கியது. ஆகஸ்ட் 10 வரை மூன்று நாட்கள் கோவை கொடிசியா ஹால் E-யில் சிறப்பாக நடைபெற உள்ளது.
இன்று துவங்கிய இக்கண்காட்சியை பாரத ஸ்டேட் வங்கியின், எல்ஹெச்ஓ, நெட்வொர்க் 3, பொது மேலாளர் ஹரிதாபூர்ணிமா, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி துவக்கிவைத்தார்.
அப்போது உடன் ஸ்ரீவத்சா ரியல் எஸ்டேட் நிறு வன நிர்வாக இயக்குனர் சி.எஸ்.ராமசாமி, மேபிளவர் எண்டர் பிரைசஸ் நிர்வாக இயக்குனர் மோகன், ஸ்ரீவாரி பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ், நிர்வாக இயக்குனர் ராஜேஷ் லுந்து மற்றும் மவுன்ட் ஹவுசிங் அண்டு இன்பிராஸ்ட்ரெக்சர் லிமிடெட், நிர்வாக இயக்குனர் ரமேஷ் பாப்னா ஆகியோர் உடன் கிரடாய் அமைப்பின் நிர்வாகிகள் இருந்தனர்.
விழாவிற்கு வந்திருந்தவர் களை கோவை கிரெடாய் அமைப்பின் தலைவர் எஸ்.ஆர்.அரவிந்த் குமார் வரவேற்று பேசியதாவது:-
கோவையில் சொந்த வீடுகள் வாங்க விருப்பப்படும் மக்களுக்கு இந்தப் ப்ரா பெர்ட்டி எக்ஸ்போ சிறந்த வாய்ப்பாக அமையும். இந்தக் கண்காட்சியில் 30-க் கும் மேற்பட்ட முன்னணி டெவலப்பர்கள் பங்கேற்கின்ற னர். இதில், 100-க்கும் மேற்பட்ட கட்டுமானத் திட்டங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.
கண்காட்சி குறித்து ஃபேர் புரோ 2025 கண்காட்சி தலைவர் சுரேந்தர் விட்டல் பேசியதாவது:- அடுக்குமாடி குடியிருப்புகள், வில்லாக்கள், சீனியர் லிவிங் யூனிட்கள், பிளாட்கள் மற்றும் கேட்டட் கம்யூனிட்டிகள் உள்ளிட்ட சொத்துகள் இங்கு காட்சிக்கு வைக்கப்படுகின்றன. ரூ. 20 லட்சம் முதல் ரூ. 7 கோடி வரையிலான விலைகளில் சொத்துகள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட உள்ளன. டெவலப்பர்கள் இந்த எக்ஸ்போவிற்காகவே தனிச் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளனர். இந்த ஆண்டு கண்காட்சிக்கு சுமார் பத்தாயிரம் பேர் வருகை புரிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இக்கண் காட்சிக்கு அனுமதி இலவசம். இவ்வாறு அவர் பேசினார்.
இந்தக் கண்காட்சியில் கிரெடாய் கோவைஅமைப்பு மற்றும் ஜெ.எல்.எல். நிறுவனம், சார்பில் நடத்தப்பட்ட கோவை ரியல் எஸ்டேட் சந்தை தொடர்பான ஆய்வு அறிக்கையை ஜெ.எல்.எல். இந்தியாவின் குடியிருப்பு சேவைப்பிரிவின் தலைவரும், சென்னை மற்றும் கோயம்புத்தூரின் மூத்த நிர்வாக இயக்குநருமான சிவ கிருஷ்ணன் வெளியிட, கிரடாய் அமைப்பினர்கள் பெற்றுக்கொண்டனர்.
இந்த ஆய்வு அறிக்கையில் கோவை கடந்த ஐந்து ஆண்டுகளில் அலுவலக அமைவிட தேவை ஏழு மடங்கு வளர்ச்சி பெற்றுள்ளது. வருடாந்திரம் புதியதாக கட்டப்படும் குடியிருப்புகளின் எண்ணிக்கை 52 சதம் உயர்ந்துள்ளது. மேலும் மூலதன மதிப்பு நிலையான உயர்வை கண்டு வருவதுடன் மேலும் உயரும் சூழ்நிலை நிலவுகிறது. உற்பத்தி நிலைத்திறன் மற்றும் மின் வர்த்தக பயன்பாடு அதிகரிப்பு காரணமாக தொழில் மற்றும் தளவாடக் கிடங்குகள் பிரிவு 47 சதம் அதிகரித்து 6.6 மில்லியன் சதுர அடியாக உயர்ந்துள்ளது. சீனியர் லிவிங் பிரிவில் இந்திய அளவில் 16 சதம் பங்குகளைக் கொண்டு முன்னணி நகராக உருவெடுத்துள்ளது.
“வளர்ந்து வரும் நகரங்களில் கோவை முன்னணி நகரமாக திகழ்கிறது. விரிவடைந்த பொருளாதாரம், மெட்ரோ ரயில் மற்றும் விமான நிலைய விரிவாக்கம் போன்ற உட்கட்டமைப்பு திட்டங்கள் நகரத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கின்றன. தரமான மற்றும் திறன் வாய்ந்த மனித வளத்தின் காரணமாக தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சி பெற்று, மக்களின் வாழ்வாதாரம் மேம்பட்டு, வீட்டு வசதி, வணிகம் மற்றும் தொழில் துறைகள் மேம்படுகின்றன. இதனால் அருகில் உள்ள கேரள மாநிலத்தில் இருந்தும் பொருளீட்டும் நோக்கில் இளைஞர்கள் கோவைக்கு வருகை தருவதால், கோவையின் தொழில் வளம் மேலும் வளர்ச்சி அடைகிறது”.
அலுவலக அமைவிட பிரிவின் மொத்த பங்கு 8.6 மில்லியன் சதுர அடியாக உயர்ந்துள்ள நிலையில், வெறும் 6 சதம் மட்டுமே காலியாக இருக்கிறது. இந்த பிரிவில் குளோபல் கெப்பாசிட்டி சென்டர் என்னும் உலகளாவியதிறன் மையங்களின் பங்கு கணிசமாக உள்ளது.
குளோபல் கெப்பா சிட்டி சென்டர், 2019-ல் இருந்த நிலையைக்காட்டிலும், 3 மடங்கு வளர்ச்சி பெற்று தற்போது 50 உலகளாவிய திறன் மையங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
வருடா வருடம் புதியதாக கட்டப்படும் குடியிருப்புகளின் எண்ணிக்கை 52 சதம் உயர்ந்துள்ளது. அதேசமயம் 7 சதத்துக்கு கீழான எண்ணிக்கையில் தான் விற்பனை ஆகாத புதிய குடியிருப்புகள் கட்டுமான நிறுவனங்களின் கையிருப்பில் உள்ளன. தகவல் தொழில் நுட்பத்துறை ஊழியர்கள் மற்றும் வெளிநாட்டு வாழ் மக்களின் தேவை உயர்ந்ததன் காரணமாக குடியிருப்புகளின் மதிப்பு நிலையான உயர்வை கண்டுள்ளன. சீனியர் லிவிங் சந்தையில் இந்திய அளவில் 16 சதம் கோவையில் அமைந்திருப்பது அதன் சிறப்பாகும்.
சீரான பருவநிலை மற்றும் உலகத்தரம் வாய்ந்த நவீன மருத்துவ வசதிகள் இந்த பிரிவின் முன்னோடியாக கோவை திகழ்வதற்குக் காரணமாக உள்ளன.
தொழில் மற்றும் தளவாடக் கிடங்குகள் பிரிவு கடந்த 5 ஆண்டுகளில் 47 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது. தமிழ் நாடு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடத் திட்டம், தொழில் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் அதிகரித்து வரும் மின் வணிக பயன்பாடு ஆகியவை இதன் முக்கிய காரணமாகும்.

மேலும் தற்போது வெளி யிடப்பட்டுள்ள கோவை இரண் டாம் முழுமை திட்டம் 2041, கோவையின் தொலைநோக்கு மிக்க வளர்ச்சிப்பாதைக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.
மெட்ரோ ரயில், (119 கி.மீ) வெளி வட்டசாலை, விமான நிலைய விரிவாக்கம் போன்ற முக்கிய மான உள்கட்டமைப்பு கள் நகர எல்லைகளை விரிவடையச் செய்யும். மேலும் கோவை இரண்டாம் முழுமை திட்டம் 2041-ல், மின்வாகனம், மருத்துவ தொழில்நுட்பம், பாதுகாப்பு போன்ற துறைகளுக்கான 9 திட்டமிடப்பட்டுள்ள பொருளா தார மையங்கள், நகரின் நீடித்த மற்றும் நிலையான வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும்.
இந்த வேகமான வளர்ச்சி யின் எதிர்விளைவாக அவிநாசி சாலை, சத்தி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை போன்ற நகரின் முக்கிய வழிதடங்களில் உள்ள நிலத்தின் மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது. இது, சென்னை போன்ற பெரு நகரங்களின் நிலமதிப்பை ஒப்பிடக்கூடிய நிலையை உருவாக்கியுள்ளது.

எனவே விலை விண்ணை முட்டும் முன் கோயம்புத்தூரில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம். இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, நிகழ்ச்சியில் முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் நகர வளர்ச்சி குறித்து நிபுணர்களின் கலந்துரையாடலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொருளாளர் கார்த்திக் குமார் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, உதவி பொது மேலாளர், வீட்டுக்கடன் பிரிவு, கோவை வடக்கு பிரவீன், ப்ராபெர்ட்டி எக்ஸ்போவில் இடம்பெறவுள்ள முக்கிய அம்சங்களை விளக்கினார்கள்.
இக்கண்காட்சிக்கு ஜக்கு வார், காவேரி பாலிமர்ஸ், புஷ்பிட் ஸ்டீல்ஸ், ரெனாட்டஸ் புரோகான் ஆகியவை கோல்ட் பார்ட்னராக உள்ளனர்;. சூர்யதேவ் அலாய்ஸ் அண்டு பவர், வாட்டர்டெக் இந்தியா, ஈகிள் இண்டஸ்ட்ரீஸ், அப்ரூவல் குரு மற்றும் அதானி சிமென்ட் ஆகியவை கார்ப்பரேட் பார்ட்னராக பங்கேற்கின்றன.
இந்த ப்ரொபர்ட்டி எக்ஸ்போ தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்களுக்காக திறந்திருக்கும். வீடு விலைக்கு வாங்க விருப்பப்படும் மக்கள் அனைவரையும் கிரெடாய் கோவை அழைக்கிறது.
இந்தக் கண்காட்சியில் டெவ லப்பர்களைத் தவிர, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, சவுத் இந்தியன் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா, எச்.டி.எப்.சி வங்கி, எல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனான்ஸ் போன்ற முன்னணி வங்கி கள் பங்கேற்கின்றனர். இந்த வங்கிகள் மக்களுக்கு தேவை யான வீட்டுவசதி கடனை வழங்க உள்ளன.
இந்தக் கண் காட்சியின் பிரதான பார்ட்னர் வங்கியாக எஸ்பிஐ வங்கி செயல்படுகிறது. துவக்க விழா முடிவில் கிரெடாய் கோவை செயலாளர் சஞ்சனா விஜய்குமார் நன்றி கூறினார்.
இந்த கண்காட்சிக்கான ஏற் பாடுகளை கிரெடாய் கோவை அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்துள்ளனர்.



