fbpx
Homeபிற செய்திகள்உலக அளவிலான விளையாட்டு போட்டியில் 7 தங்கம், 7 வெள்ளி பதக்கங்களை குவித்த கோவை ஸ்ரீ...

உலக அளவிலான விளையாட்டு போட்டியில் 7 தங்கம், 7 வெள்ளி பதக்கங்களை குவித்த கோவை ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனம்

YSPA இந்தோ – நேபால் சார்பில் உலக அளவிலான விளையாட்டுப் போட்டிகள் 5 நாட்கள் நடைபெற்றது. இதில் ஆறு நாடுகள் பங்கேற்றன. இதில் சுமார் 281 மாணவ மாணவியர் பங்கு பெற்றனர்.


இதில் கோவை ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனத்தில் இருந்து ஸ்ரீதேவ் (குத்துச்சண்டை), அருண் விஜய் -(செஸ்), கோபாலகிருஷ்ணன் & சரண்குமார்- (கேரம்), அரவிந்த், பிரேம், பஷீர் அகமத், தனுஷ் -(இறகு பந்து) ஆகிய 7- மாணவர்களும், க்ஷனன், அலினா, காயத்ரி, ஷாலினி, தஸ்னீம், பவித்ரா (இறகு பந்து) ஆகிய 7 -மாணவிகளும் மொத்தம் 14 பதக்கங்களை வென்று வந்துள்ளனர்.

அதில் 7 தங்கப் பதக்கமும் 7 வெள்ளிப் பதக்கமும் அடங்கும். இவர்களுடன் அபி ராமி கல்லூரி நிறு வனத்தின் உடற்கல்வி இயக்குனர் ஜோயல் எமர்சன் மற்றும் உதவி உடற்கல்வி இயக்குனர் வி.ஐஸ்வர் யாவும் பயிற்று நர்களாக உடன் சென்றனர்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை கல்லூரி நிறுவனர் டாக்டர் பி.பெரியசாமி வாழ்த்தினார். மற்றும் இயக்குனர்கள் டாக்டர் செந்தில்குமார், டாக்டர் பாலமுருகன் மற்றும் டீன் ஜெயபாரதி ஆகியோரும் வாழ்த்தினார்கள்.

படிக்க வேண்டும்

spot_img