fbpx
Homeபிற செய்திகள்நந்தா பொறியியல் - தொழில்நுட்ப கல்லூரிகளில் வளாகத் தேர்வு

நந்தா பொறியியல் – தொழில்நுட்ப கல்லூரிகளில் வளாகத் தேர்வு

ஈரோடு நந்தா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளின் சார்பில் இறுதியாண்டு பயின்று வெளி யேறும் தகவல் தொழில் நுட்பம், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் மாணவர்களுக்கென, ஆஸ்திரேலியாவினை தலைமையிடமாகக் கொண்டு சென்னையில் சிறப்பாக செயல்பட்டு வரும் “பிஐ டெக்னாலஜிஸ்” நிறுவனமானது தனது வளாகத்தேர்வில் நடத்தியது.

ஸ்ரீ நந்தா அறக்கட்டளை தலைவர் வி.சண்முகன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்வளாகத் தேர்வினை “பிஐ3 டெக்னாலஜிஸ்” நிறுவனத்தின் மனிதவள மேலாளர் திருமதி சுஷ்மிதா தலைமையில் மூன்று பேர்கள் கொண்ட குழு சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சியினை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்கள்.

பின்னர், நத்தா பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் யு.எஸ். ரகுபதி. மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் முனைவர் ச. நந்தகோபால் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

படிக்க வேண்டும்

spot_img