fbpx
Homeபிற செய்திகள்இராணிப்பேட்டை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 306 மனுக்கள்

இராணிப்பேட்டை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 306 மனுக்கள்

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் ஆட்சியர் சந்திரகலா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருவாய்த் துறை நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, வேளாண்மைத் துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சித்துறை, கூட்டுறவு, மின்சாரத்துறை சார்பான குறைகள், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, கிராம பொதுப்பிரச் சனைகள், குடிநீர்வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த 306 மனுக்களை ஆட்சியர் சந்திரகலா பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி களிடமிருந்து பெற்றுக் குறைகளை கேட்டறிந்தார். பின்னர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மற்றும் மனு நிராகரிப்பிற்கான காரணங்களையும் மனுதாரர்களுக்கு வழங்கிட வேண்டுமென அலுவ லர்களுக்கு உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை சரண்யா தேவி, நேர்முக உதவியாளர் ஏகாம்பரம் (பொறுப்பு), ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அறிவுடைய நம்பி, உதவி ஆணையர் (கலால்) ராஜ்குமார், நேர்முக உதவியாளர் நிலம் ரமேஷ், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த ராமகுமார் மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img