தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்புத் துறை மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, ஈரோடு மாவட்டம் சார்பில் உணவு கையாளுகர் பயிற்சி எடிசியா ஹாலில் நடைபெற்றது. இதில் பேரமைப்பின் மாநில துணைத் தலைவர் பி.திருமூர்த்தி மாவட்ட தலைவர் இரா.க.சண்முகவேல் மாவட்ட பொருளாளர் உதயம் பொ.செல்வம் பங்கேற்று பயிற்சியின் தேவை குறித்து விவரித்தனர். ஈரோடு மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின் துணைத் தலைவர் பி.சுரேஷ் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
இந்த முகாமில் அசோகபுரம் அனைத்து வணிகர்கள் சங்கம், ஈரோடு மாநகராட்சி நேதாஜி தினசரி மார்க்கெட் கனி வணிகர்கள் சங்கம், ஈரோடு வெங்காயம் மற்றும் பழங்கள் மொத்த வணிகர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அ.லாரன்ஸ் ரமேஷ் நன்றி கூறினார்.



