பூதங்குடி எஸ்.டி. சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தொழில்துறை வழி காட்டுதல் பெற்றோர் மற்றும் மாணவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் சாமுவேல் சுஜின் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் தீபா சுஜின் (குழந்தைகள் நல மருத்துவர்) ஆகியோர் தலைமை வகித்தனர்.இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக தொழில்துறை ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி கலந்துகொண்டு எதிர்கால வாழ்விற்கு மாணவர்கள் எந்தெந்த துறைகளை தேர்வு செய்து படிக்க வேண்டும் என்றும் அவற்றில் இருக்கும் சிறப்பம்சங்கள் மற்றும் மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டிய பல்வேறு தேர்வுகள் பற்றியும் விளக்கினார்.
மேலும் மாணவர்கள் ஒவ்வொரு துறையிலும் எம் மாதிரியான தேர்வு களை எதிர்கொள்ள வேண்டும் என்றும் எந்தெந்த கல்லூரியில் மாணவர்கள் சேர்ந்து படித்தால் சிறப்பான எதிர்காலம் அமையும் என்றும் பெற்றோர்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கிச் சென்றார்.
மேலும் மற்றொரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடராஜன் (நிறுவனர் நடராஜன் ஸ்கேட்டிங் அகடமி, மாநில செயலர் தமிழ்நாடு ஸ்கேட்டிங் அகடமி ) மாணவர்கள் பள்ளியில் பயிலும் போதே எவ்வாறு தங்களது திறமைகளை வளர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், பள்ளி அளவில் விளையாட்டு துறைகளில் சாதிக்கும் மாணவர்களுக்கு கல்லூரி படிப்பில் எந் தெந்த துறைகளில் எவ்வளவு இட ஒதுக்கீடு வழங்கப் படுகின்றது என்றும் பள்ளிப் படிப்பில் விளையாட்டின் முக்கியத்துவம் பற்றி மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர் மத்தியிலும் எடுத்துரைத்தார். இவ்விழா வில் 300க்கும் மேற்பட்ட பெற்றோர்களும் 500க்கும் மேற்பட்ட மாணவர் மாணவிகளும் கலந்து கொண்டனர்.



