fbpx
Homeபிற செய்திகள்ஆலம் விழுதுகள் அறக்கட்டளையின் தினமும் அன்னதான திட்டம் துவக்கம்

ஆலம் விழுதுகள் அறக்கட்டளையின் தினமும் அன்னதான திட்டம் துவக்கம்

கோவையில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக பல்வேறு சமூக நல பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது ஆலம் விழுதுகள் அறக்கட்டளை.

இந்த அறக் கட்டளையின் நிறுவனர் மீனா ஜெயக்குமார் தலைமையில் ஏழை குழந்தைக ளுக்கு ஆரம்ப கல்வி முதல் கல்லூரி வரை இலவச கல்வி பயிற்றுவிப்பது மற் றும் ஏழை குடும்பத்தினர் களுக்கு மருத்துவ உதவி செய்வது என பல் வேறு சமூகம் சார்ந்த நலப்பணி களை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆலம் விழுதுகள் அறக்கட்டளை சார்பாக தற்போது ஏழை எளியவர்கள் மற்றும் ஆதவற்றோர்களுக்கு தின மும் உணவு வழங்கும் வகையில் விருந்தில் வேர் எனும் புதிய அன்னதான திட்டத்தை துவக்கி உள்ளனர்.

பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ஆலம் விழுதுகள் அறக்கட்டளை அலுவலகம் முன்பாக நடைபெற்ற இதற்கான துவக்க விழாவில் அறக் கட்டளையின் நிறுவனர் மீனா ஜெயகுமார் விருந்தின் வேரில் அன்னதான திட்டத்தை துவக்கி வைத்தார்.

முன்னதாக செய்தி யாளர்களிடம் பேசிய அவர், ஆலம் விழுதுகள் அறக்கட்டளை சார்பாக தொடர்ந்து கல்வி உதவி, மருத்துவ உதவி போன்ற சமுதாய நலப்பணிகளை செய்து வருவதாகவும்,இதன் ஒரு பகுதியாக விருந்தின் வேரில் எனும் புதிய அன்னதான திட்டத்தை துவக்கி உள்ளதாக தெரிவித்தார்.

இதில் தினமும் நூறு பேருக்கு என்ற அளவில் மதியம் 12 மணி முதல் ஒரு மணி வரை அலுவலகத்தின் முன்பாக அன்னதானம் வழங்க உள்ளதாக தெரிவித்த அவர், வரும் காலங்களில் இந்த திட்டத்தை விரிவுபடுத்தி ஐநூறு பேருக்கு தினமும் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக குறிப்பிட்டார்.

முன்னதாக நடைபெற்ற விருந்தின் வேரில் துவக்க விழாவில் ரோட்டரி கிளப் அக்ருதி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img